Thursday, January 22, 2009

நாயின் தருக்கம்(Dog's Logic)

காய்ந்து போன எலும்புத் துண்டை கடிக்கின்ற நாய் எலும்புத் துண்டின் கீறல்களால் தன் உதட்டில் இருந்து வருகின்ற இரத்தம் அறியாது எலும்புத் துண்டின் சுவையே என்று நினைத்து மேலும் ஆவேசமாக கடிக்கும்.

தன்னையே அழித்துக் கொண்டு கிடைக்கின்ற தற்காலிக சந்தோஷத்துக்காக தேடி ஒடும் இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள்.

ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். காய்ந்து போன எலும்பை கடித்த நாய் அடைந்த சந்தோசத்திற்கும் மது, சிகரெட் போன்ற பொருட்களால் தன்னையே அழித்துக் கொண்டு சிலர் அடையும் சந்தோசத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

- தொகுப்பு: சுகபோவனந்தா ஒலிநாடா.

3 comments:

  1. உண்மை தான். அற்ப சுகத்திற்காக தன் மொத்தத்தையும் தொலைத்துக் கொள்ளுகிற இயல்பை மனிதன் ஒருவனிடத்திலே இயற்கை ஒரு காரணத்திற்காகவே வைத்திருக்கிறது. மிருகங்கள், தன்னுடைய சுகங்கள் சௌகர்யங்கள் எல்லாவற்றையும் survival என்கிற ஒரே அடிப்படையின் கீழ் தான் தீர்மானிக்க முடியும். மனிதன் ஒருவனாலேயே, நல்லது எது, அல்லது எது என்பதைப் பகுத்தறிந்து அதன் படி வாழவும்,
    மனித உடலில் மிருகமாகவே வாழ்வதா அல்லது மனிதனையும் மீறி ஒரு உயர் தெய்வீக நிலையை அடைவதா என்பதை தீர்மானிக்கவும் முடியும்.

    ReplyDelete
  2. கிருஷ்ணமூர்த்தி அவர்களே உங்களது கருத்துக்கு மிக்க நன்றி!!!

    ReplyDelete