Wednesday, January 7, 2009

கடினமான உழைப்பு

வைரத்தை தீட்ட தீட்ட தான் ஜொலிக்கின்றன அது போல

மனிதன் உண்மையாக உழைக்க உழைக்க அவனது பெயர் சான்றோர்கள் மத்தியில் ஜொலிக்கின்றன.

உழைப்பு என்பது ஏதோ வியர்வை சிந்துகின்ற ஒரு நிகழ்வு என்று எண்ணி விடாமல் எதை செய்தாலும் அதை முறையாகவும், முழுமையாகவும் செய்ய வேண்டும்.

எந்த ஒரு உழைப்பிலும் நமது செயல் தண்ணிர் மேல் எழுதப்பட்ட எழுத்து போல் இல்லாமல் ‘பசுமரத்து ஆணி’ போல் கல்லின் மேல் எழுதப்பட்ட எழுத்தாக இருக்க வேண்டும். இதுவே நாம் நம் பெற்றோருக்கு செய்கின்ற நன்றி கடன் என்றும் கூட கூறலாம்.

குறள்:

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்லெனும் சொல்.

பொருள் “ஆகா இவனைப் பிள்ளையாக பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு”, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன் தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.(இது இருபாலருக்கும் பொருந்தும்.

No comments:

Post a Comment