உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். (குறள் 395)
பொருள் – செல்வர் முன் வறியவர் பணிந்து நிற்பது போல், கற்றவரிடம் பணிந்திருந்து கற்றவரே உயர்ந்தவர். அங்ஙனம் கல்லாதவர் கடைப்பட்டவராவர்.
விளக்கம் – நல்லார் சொல் கேட்டலும்
நல்லார் வழி நடத்தலும்
நல்லார் செயல்களை திரும்ப திரும்ப நினைவு கூர்தலும்
நல்லார் ஆவதற்கு வழி விடும் என நம்புகிறேன்.
இதைத்தான் ஒளவையார் கூட இரண்டு வார்த்தையில் மிக அருமையாக சொல்லியுள்ளார். சான்றோரினத்திரு.
பொருள் - அறிவு ஒழுக்கங்களில் சிறந்த சான்றோருடன் கூடி வாழ வேண்டும்.
No comments:
Post a Comment