Thursday, May 29, 2014

முன்னுரை : விருதுநகர் மாவட்டம் - விறு விருப்பான மாவட்டம் !!!

இந்த மாவட்டதில் தான் எத்துனை எத்துனை கிராமங்கள் மற்றும் துணை கிராமங்கள் !!!

மதுரையின் நாயகியாம் பவள நிற மேனி என் தாய் மீனாக்ஷி எனக்கு இந்த தொடரை நல்லபடியாக எழுத ஆசி வேண்டி என் அப்பன் அருள் மிகு கொச்சடயான் முத்தையனை துணையாக கொண்டு தொடங்குகின்றேன் !!!

அய்யா திரு.பரதன் மற்றும் அவர்கள் குழு இது வரை 130 கிராமங்களையும் அதன் உட்கிராமங்களையும் விரிவாக, ஆழமாக களப்பணி கண்ட விடா  முயற்சியும் தன்னலம் கருதாத தொண்டும் என்னை மெய் சிலிர்க்க வைக்கின்றன...

ஏன் இந்த களப்பணி ? எதற்காக இப்பொழுது இதை செய்ய வேண்டும்? இதன் பயன் தான் என்ன? இப்படி உங்களுக்குள் எத்தனையோ கேள்வி கணைகளை தொடுக்க நீங்கள் ஆயத்தமாக இருக்கலாம் ...

இதற்க்கெல்லாம் ஒரே பதில் - எங்கோ ஒரு மூலையில் யாருக்கோ முகம் தெரியாத மனிதர்களுக்காக சிறு கூட்டுக்குள் அடைந்து வேலை வேலை என்று தாங்கள் சிங்கங்கள் தான் என்றறியா எனதருமை நண்பர்களுக்காக...

நாம் யார்... நமது பாட்டன் , பூட்டன் , முப்பாட்டன் எப்படியெல்லாம் உலகை வாழ வைத்தார்கள் என்று மறந்து போன எனது தலைமுறை மக்களுக்காக .. எனக்காக நானே எழுதிக்கொள்ளும் ஒரு சிறிய மடல் ... இனி வரும் நாட்களாவது நாம் விழித்தெழுந்து மீண்டும் ஒரு உலகம் செய்வோம் ... அந்த உலகத்திலாவது எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற சிந்தனையையும் செயலையும் பரப்புவோம்...

நாம் எதையும் புதிதாக செய்துவிடவில்லை ... நாம் யார் என்பதை நமக்கு உணர்த்தும் ஒரு சிறிய தொகுப்பகதான் இதை சமர்பிக்கிறேன் !!!

எழுத்து பிழையையும் , அர்த்த பிழையையும் தயவு செய்து சுட்டி காட்டி திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடுத்து ஒரு கூட்டு முயற்சியாக மாற்ற உதவுங்கள் நண்பர்களே ... மீட்டெடுப்போம் நாம் யார் என்பதை !!!


விருதுநகரை நோக்கி பயணம் தொடரும்....

நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு ...

நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு மீண்டும் எனது வலைதளத்திற்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி ...

என்ன எழுதுவது என்று ஒரே குழப்பம்... என்றுமே ஒரு நீண்ட இடைவெளி என்பது எதற்குமே நல்லது அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை உணர்ந்தேன்...

ஆனாலும் கடவுளுக்கு மிக்க நன்றி சொல்லியே ஆகவேண்டும்... இப்பொழுது என்னிடம் எழுத ஒரு பெரிய அத்யாயமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும் ...

எனக்கு மிகவும் நெருக்கமான எனது நண்பர் / தலைவர் / மிக்க ஆற்றல் வாய்ந்த ஒரு மாமனிதர் அய்யா  திரு.பரதன் மற்றும் அவர்கள் குழு ஆற்றிய களப்பணியை இங்கு ஒரு தொடராக எழுத முயற்சிக்கிறேன் ... இதில் விருதுநகர் மாவட்டத்தையும் அதன் கிராம பகுதிகளையும் அங்கு இருந்த கலாச்சாரத்தை அப்படியே புதினபடுத்த உதவிய அய்யாவிற்கும் அவரது குழுவிற்கும் மிக்க நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் ...

இதை நூலாய் தொகுக்க யாரேனும் விரும்பினால் தயவு செய்து எனது மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொள்ளவும் ...

Monday, January 10, 2011

சேவை

11 ஜனவரி 2011

சேவை

பணக்காரன் ஒருவனது தோட்டத்தில் தோட்டக்காரர்கள் இருவர் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். ஒருவன் சோம்பேறி, வேலை செய்வதில் விருப்பம் இல்லாதவன். எஜமான் தோட்டத்துக்கு வரும் போதெல்லாம் ஓடோடிச் சென்று, கூப்பிய கரங்களுடன் குழைந்து நிற்பான். இன்னொருவன் அதிகம் பேசுவதில்லை. கடுமையாக உழைப்பான். பழங்களையும் காய்கறிகளையும் பயிர் செய்து, எஜமான் வீட்டுக்குச் சுமந்து செல்வான். இந்த இருவரில், எஜமானின் அன்பு யாருக்குக் கிடைக்கும்?

கடவுள்தான் எஜமான். இந்த உலகமே அவருடைய தோட்டம். இங்கே இருவகை மக்கள் இருக்கின்றனர். ஒரு வகையினர் சோம்பேறிகள்; ஏமாற்றுக்காரர்கள். இறைவனின் அழகையும், பண்பு நலன்களையும் புகழ்பவர்கள். மற்றொரு வகையினர், பலவீனமான மனிதர்க்கும், ஆண்டவன் படைத்த அனைத்து உயிர்களுக்கும் கைம்மாறு கருதாமல் உழைத்துத் தொண்டாற்றுபவர்கள். இறைவனின் அன்புக்கு உரியவர்கள். பிறர் நலனுக்காகச் செயல்படுபவர்களே! கருத்தாழம் மிக்க இந்த விளக்கத்தை நெஞ்சில் நிறுத்த வேண்டும்.

மனிதன் உயிரைப் பாதுகாக்க விரும்பினால், அதில் எப்போதும் இயக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். கர்மம் செய்யாமல் மனிதன் அரை கணமேனும் இருக்க முடியாது. ‘நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தொழில் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பது விதி’ என்கிறார் மகாகவி பாரதி.

பலன் கருதாமல் இறைவனுக்கும், பரம்பொருளால் படைக்கப்பட்ட உயிர்களுக்கும் தங்கள் செய்கையால் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமே அன்றி, சும்மா இருத்தல் தகாது என்கிறது நம் சமயம். நான், எனது என்ற உடமை-மனோபாவம் உள்ளவர்களால் நிம்மதியான வாழ்க்கையை எந்த நாளும் நடத்த முடியாது. நிம்மதியும், அமைதியும் ஆயுள்வரை நீடிக்க, விளைவுகளில் நாட்டம் செலுத்தாமல், செயல்களில் ஈஸ்வர அர்ப்பணத்துடன் ஈடுபட வேண்டும்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe |Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Sunday, January 9, 2011

அச்சம்

10 ஜனவரி 2010

அச்சம்

அச்சமே கீழ்மக்களின் ஆசாரம். ஒழுக்கம் தவறாதவன் எதன் பொருட்டும், எவர் பொருட்டும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. அச்சப்படுதல் குறித்து ஓர் அற்புதமான ஈசாப் கதை.

ஒரு காட்டில் முயல்கள் பல இருந்தன. எதைக் கண்டாலும் அவை அச்சத்தில் நடுங்கின. அன்றாடம் அஞ்சியஞ்சி உயிர் வாழ்வதைவிட ஒரேயடியாக செத்துவிடுவது சுகமென்று அவற்றுக்குத் தோன்றியது. எல்லா முயல்களும் ஓரிடத்தில் கூடின; மலை உச்சியை அடைந்து, அங்கிருந்து அடிவாரத்தில் உள்ள மடுவில் விழுந்து உயிரை விடுவது என்று முடிவெடுத்தன. திட்டமிட்டபடி முயல்கள் அனைத்தும் மலையுச்சிக்கு வந்து சேர்ந்தன. மடுவில் விழத் தயாராக நின்றன. அந்த மடுவின் கரையில் இருந்த தவளைகள் மலையுச்சியில் இருக்கும் முயல்களைக் கண்டதும் கலக்கமுற்று, நீரில் பாய்ந்து மறைந்தன. தங்களைவிட அஞ்சி வாழும் உயிரினங்கள் உலகில் உண்டு என்ற உண்மையை அறிந்த முயல்கள், மடியும் முடிவை மாற்றிக் கொண்டன.

இந்த ஈசாப் கதை இன்னொரு நீதியையும் வலியுறுத்துகிறது. உலகில் துன்பத்தைச் சுமப்பவர்கள் நாம் மட்டும் இல்லை. நம்மைவிட மிக மோசமான துன்பத்தை அனுபவிப்பவர்கள் இந்த மண்ணில் உண்டு. அதனால், துன்பத்திலிருந்து விடுதலை தேடி யாரும் தற்கொலையில் ஈடுபடக்கூடாது. எந்த நிலையிலும் எந்த உயிரினமும் மனிதரைப் போல் தற்கொலை செய்து கொள்வதில்லை.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Thursday, January 6, 2011

சிந்தனைகள்

07 ஜனவரி 2011

சிந்தனைகள்

· நண்பனே! முதலில் மனிதனாய் இரு. பிறகு நீ விரும்புவன அனைத்தும் உன்னைப் பின் தொடர்வதை நீ காண்பாய்.

· நம்மையே நாம் நம்பாதவரை நமக்குக் கடவுள் நம்பிக்கை ஏற்படாது. உண்மையில் அனைவருள்ளும் கடவுள் இருக்கிறார்.

· மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்.

· மக்கள் உன்னைப் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள்புரியட்டும் அல்லது புரியாமல் போகட்டும்; உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போகட்டும், நீ மட்டும் உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவேனும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனமாக இரு.

· மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆகின்றானோ அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளையும் கடந்தாக வேண்டும்.

· உலகப் பெரியோர்கள் வாழ்க்கையை ஆராய்ந்துப் பார்த்தால் அவர்கள் ஞான ஒளியைப் பெறுவதற்கு, இன்பத்தை விடத் துன்பமே – செல்வத்தைவிட வறுமையே – புகழை விட இகழே அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருப்பது தெரியவரும்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Wednesday, January 5, 2011

சிந்தனைகள்

06 ஜனவரி 2010

சிந்தனைகள்

· நீங்கள் வெற்றி பெறுவதற்கு மிகுந்த விடாமுயற்சியையும், பெரும் மன உறுதியையும் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன் “சமுத்திரத்தைக் குடித்திடுவேன்” என்று சொல்கிறான். அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழைத்தால் நீ உனது குறிக்கோளை நிச்சயம் அடைவாய்.

· மக்களுக்காகச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவன் ஆகிறான்.

· மனிதன் தோல்வியின் மூலமே மேலும் புத்திசாலி ஆகிறான்.

· தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

· எப்போதும் எந்த மனிதனையும் உருப்படாதவன் என்று சொல்லாதே. அவனிடமுள்ள பழைய குணங்களை மேலும் சிறந்த புதிய பழக்க வழக்கங்களால் தடுத்து விடமுடியும்.

· ஒரே ஒரு கொள்கையை எடுத்துக் கொண்டு, அதற்காகவே உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிருந்தால் உனக்கு ஆதரவான காலம் வரும்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Tuesday, January 4, 2011

ஆசை

05 ஜனவரி 2011

ஆசை

ஆசையே அலைபோல நாமெல்லாம் அதன்மேலே என்பது தான் ஆசையின் உச்சக்கட்டம். அப்படிப்பட்ட ஆசையை பற்றி நம் முன்னோர்கள் கூறுவது.

  • நெருப்பை புகை மறைப்பது போல், கண்ணாடியைத் தூசி மறைப்பது போல், வயிற்றில் வளரும் குழந்தையைக் கருப்பை மறைப்பது போல் ஆசை அறிவை மறைக்கும் என்று அழகான உவமைகளுடன் விளக்குகிறது பகவத்கீதை.
  • அனுபவித்து ஆசையைத் தீர்ப்பது என்பது நெய்யூற்றி நெருப்பை அணைக்கும் செயல். நெய்யூற்ற ஊற்ற நெருப்பு வளரும். அனுபவிக்க அனுபவிக்க ஆசை தொடரும். மண், பொன், பெண் எதுவானாலும் ஒரே கதைதான் என்கிறது மகாபாரதம்.
  • துன்பத்திற்குத் தீர்வு ஆசையை அனுபவிப்பது அல்ல; ஆசையை அடியோடு ஒழிப்பதுதான்.
  • நாம் அனைவரும் ஆமைகள் என்கிறார் அப்பர். ஆமை நீண்ட நாட்களாக குளிர்ந்த நீரில் வாசம் செய்வதால் அதன் உடல் விரைத்துக் கிடக்கிறது. வழிப்பபோக்கன் ஒருவன் நீரில் இருந்த ஆமையைக் கண்டான். ஆமைக் கறியின் சுவை அவன் நாவில் நீரை வரவழைத்தது. அதை உண்டு பசியாற வேண்டுமென்று அவனுள் ஆசை எழுந்தது.

ஆமையைப் பிடித்தான். கல்லை அடுக்கி, கையில் கொண்டுவந்த கலனில் நீர் நிரப்பி, அதனடியில் நெருப்பு வளர்த்து, ஆமையைக் கொதிகலனில் போட்டான். நீர் கொஞ்சம் கொஞ்சமாக சூடேறியது. விரைத்துக் கிடந்த ஆமைக்கு நீரின் வெது வெதுப்பு சுகத்தைக் கொடுத்தது. ‘என்ன சுகம், என்ன சுகம்’ என்று அங்குமிங்கும் நீரில் திளைத்து ஆடியது. கொதிகலனில் நீரின் வெப்பம் உயர உயர, ஆமையின் உடல் கொதித்து, உயிர் துடித்து ஆவி அடங்கியது. முதலில் இன்பம்; முடிவில் துன்பம். இதுவே என்றும் மாறாத வாழ்க்கை நியதி.

உலையில் ஏற்றித் தழலெரி மடுத்த நீரில்

திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல்

தெளிவிலாதேன…

‘எல்லை மீறினால் எதுவும் துன்பமே’ என்ற தெளிவு ஆமைக்கு மட்டுமா, இல்லை… நமக்குமதானே?

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe|Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company