Sunday, October 31, 2010

ராக்பெல்லர்

1 நவம்பர் 2010

ராக்பெல்லர்

அமெரிக்காவில் ஒரு சாதாரண விற்பனைப் பிரதிநிதிக்கு மகனாக 1839ம் வருடம் பிறந்தார் ராக்பெல்லர். வறுமையான சூழலில் தொடர்ந்து படிக்க விரும்பமின்றி, தன் 16வது வயதில் ஒரு கமிஷன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து இரண்டு வருடம் கடுமையாக உழைத்தும் சம்பளம் உயரவில்லை. எனவே, ஒரு நண்பருடன் சேர்ந்து தனியே கமிஷன் வியபாரம் தொடங்கினார். ஓஹோவென வியபாரம்

நடந்துகொண்டு இருந்தபோதுதான், அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. எதிர்காலத்தில் எண்ணெய் வியபாரம்தான் பெருகும் வளர்ச்சியடையும் என துல்லியமாகக் கணித்த ராக்ஃபெல்லர், 1863ம் வருடம் அந்தத் தொழிலில் இறங்கினார். “உனக்குப் பணம் சம்பாதிப்பதற்கு ஏன் இவ்வளது ஆசை?” என்று நண்பர்கள் கேட்ட போது, “பணம் சம்பாதிப்பதைவிட, தொழிலில் முதல்வனாக இருக்கவே விரும்புகிறேன். சந்தோஷம் என்பது பணத்தில் இல்லை; எனக்குக் கிடைக்கும் வெற்றியில் தான் இருக்கிறது!” என்றார். சொன்னது போலவே, தொழிலில் முதல்வனாக இருந்து மிக அதிகமாகப் பணம் சம்பாதித்து, 1910 முதல் 1937 வரை உலகின் பெரும் பணக்காரராகத் திகழ்ந்தார்.

முதல் 50 வருடங்களில் சம்பாதித்த பணத்தை அடுத்து வாழ்ந்த 48 வருடங்களில் நல்ல வழிகளில் செலவிடுவதில் அதிக ஆர்வம் காட்டினார். மருத்துவ ஆராய்ச்சிக்கென ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகம், மருத்துவ சேவைக்கென ராக்ஃபெல்லர் பவுண்டேசன் எனப் பல்பேறு சேவை நிறுவனங்கள் தொடங்கி அமெரிக்காவின் முன்னனேற்றத்திலும் முக்கியப் பங்கு வகித்தார்.

தான் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகச் சம்பாதித்து வெற்றி கண்ட ராக்ஃபெல்லர், 100வயது வரை வாழ வேண்டும் என்கிற தனது ஆசை மட்டும் நிறைவேறாமல், 98 வயதில் மரணம் அடைந்தார்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Thursday, October 28, 2010

தன்னம்பிக்கை

29 அக்டோபர் 2010

தன்னம்பிக்கை

சுவாமி விவேகானந்தர் பாரீஸ் நகரிலே இருந்தபொழுது ஓய்வு எடுப்பதற்காக குதிரை வண்டியிலே தனது சிஷ்யை ஐரோப்பிய பெண்மணியுடன் பாரீஸ் நகரை வலம் வந்தார். ஒரு தெரு வழியாக ஒரு வீட்டுக்குள்ளே இருந்து இரண்டு சிறிய பையன்கள் வெளியே வந்தார்கள். அவர்களின் தோற்றம் பணக்கார வீட்டுக் குழந்தைகள் போன்று தோன்றியது. அவர்களது அம்மா அந்தக் குழந்தைகளை அழைத்து வந்தார்கள். குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அந்தக் குழந்தைகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டு, தட்டிக்கொடுத்துவிட்டு மீண்டும் குதிரை வண்டியில் ஏறி ஓட்டிக்கொண்டு போனார்.

“யார் அந்த சிறுவர்கள்?” என்று விவேகானந்தரின் சிஷ்யை கேட்டாள். “என்னுடய பிள்ளைகள்தான்” என்று கூறினார் குதிரை வண்டியை ஓட்டியவர். அவர்களுக்கு ரொம்ப ஆச்சரியம். “குழந்தைகளைப் பார்த்தால் ரொம்ப பணக்கார வீட்டுக் குழந்தைகள் போலத் தோன்றுகிறது. இவர் குதிரை வண்டி ஓட்டுகிறாரே என்று”. குதிரைவண்டு ஓட்டுகிறவர் திரும்பிப் பார்த்தார். பாரீஸ்லே ஒரு வங்கி பேரைச் சொல்லி ‘அந்த வங்கியை உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டடார். “ஓ கேள்விபட்டிருக்கிரோமே! ரொம்ப பெரிய வங்கி ஆச்சே அது! எங்களுக்கு கூட அந்த வங்கியிலே கணக்கு இருந்தது. ஆனா இப்பொழுது அந்த வங்கி திவாலாகி விட்டதாக தெரிகிறதே” அப்படின்னாங்க சுவாமியோட சிஷ்யை.

இதைக் கேட்டுவிட்டு… அதற்கு பிறகு அந்த குதிரை வண்டியைய் ஓட்டியவர் விளக்கினார். “நான் தான் அந்த வங்கிக்குச் சொந்தக்காரன்! அந்த வங்கி இப்ப கொஞ்சம் கஷ்ட நிலைமையில்தான் இருக்கிறது. பாக்கிகள் எல்லாம் வசூல் பண்ணி கடன்களை எல்லாம் அடைக்க சிறிது நாள் ஆகும் போல தெரிகிறது. இந்த நிலைமையில் நான் மற்றவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை. சொந்த ஊரிலே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தேன். என் கிட்டே இருந்தது… என் மனைவி கிட்டே இருந்தது எல்லாவற்றையும் விற்று இந்த குதிரை வண்டி வாங்கி வாடகை வண்டியாக ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். என் மனைவியும் கொஞ்சம் சம்பாதிக்கிறாள். எங்களுடைய இரண்டு பேர் வருமானத்தில் குழந்தைகளுக்கு ஆகிற செலவுகளை சரிசெய்து கொண்டு இருக்கிறோம். பாக்கிகளை வசுல் செய்து கடன்களை அடைத்ததும் மறுபடியும் வங்கியை திறந்துவிடுவேன்!” என்றார்.

சுவாமி விவேகானந்தர் இதை கேட்டுக் கொண்டு இருந்தார். மனதிற்கு மகிழ்சியாக இருந்தது. சுவாமி விவேகானந்தர் சொன்னார், “இதோ இந்த மனிதரைப் பார்? இவர்தான் சரியான வேதாந்தி. அப்படியே நடைமுறைப்டுத்தியிருக்கிறார்! பெரிய ஒரு அந்தஸ்திலே இருந்து விழுந்துவிட்டால் கூட சூழ்நிலைக்கு இரையாகிவிடவில்லை! அப்படின்னு சொல்லி ஆச்சரியப்பட்டார்!”.

“எவ்வளவுதான் கஷ்டம் வந்தாலும் தன்னம்பிக்கையை தளரவிடக்கூடாது”

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Tuesday, October 26, 2010

ஆசை

27
அக்டோபர் 2010

ஆசை

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார், ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது.அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.

“அங்கம் பருத்துவிட்டால் அழகுக் கலைகளுக்கே

பங்கம் வருவதுபோல் பணமும் ஒரு பக்கம்

சேர்ந்து கொண்டே போனால் சீரான சமுதாயம் அழகிழந்து போகுமடி….”

----இராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை.

-- நன்றி உமா சங்கர்

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Monday, October 25, 2010

அவள்

26 அக்டோபர் 2010

அவள்

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ?

ஏன் இந்த கோலத்தைக் கொடுத்தயோ?

பறவை பறந்து செல்ல விடுவேனோ? அந்தப்

பரம்பொருள் வந்தாலும் தருவேனோ?

உன்னை அழைத்துச் செல்ல எண்ணும் தலைவனிடம்

என்னையே நான் தர மறுப்பேனா?

சொன்னது நீதானா? சொல்! சொல்! என்னுயிரே!

சம்மதம் தானா? ஏன்? ஏன்? ஏன் என்னுயிரே!

இன்னொரு கைகளில் யார், யார், யார்? நானா?

(எனை மறந்தாயே?) ஏன்? ஏன்? ஏன்? என்னுயிரே!

- கண்ணதாசனின் பாடல்வரிகள்

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe |Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Sunday, October 24, 2010

மன அலை

25 அக்டோபர் 2010

மன அலை

உங்களது தீவரமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உங்கள் மனம் பிறருக்கு ஒலிபரப்புகிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இப்போது கூட அது அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறது. இது உலகறிந்த, ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.

எண்ணங்களும், உணர்ச்சிகளும் நீண்ட தூரத்திற்கு அஞ்சல் செய்யப்பட இயலுமா என்பதைத் தீர்மானிக்க ட்யூக் பல்கழைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் இடைவிடாது அறிவியல் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அஞ்சல் செய்யும் போது ஏற்படும் மனோதத்துவக் கதிர்வீச்சை (AURU) என்று அழைக்கிறார்கள்.

உதாரணம்: ‘நாய்’ என்று சொன்ன மாத்திரத்தில் நடுங்கும் மனிதர்கள் அந்த அச்சத்தை மானசிகமாக ஒலி பரப்புகிறார்கள். அந்த அச்சத்தின் நுண்ணொலியைக் கண்டதும் நாய்கள் உறுமுகின்றன, குரைக்கின்றன அல்லது சில சமயம் அந்தப் பயந்த மனிதர்களைத் தாக்கவும் செய்கின்றன. தங்கள் அச்சத்தை மானசிகமாக ஒலிபரப்பும் மனிதர்களைக் கடிக்க வருகின்ற அதே நாய்கள் அவற்றிடம் உண்மையான அன்புகாட்டும் மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை. வாலை ஆட்டி அன்புடன் வரவேற்கின்றன. உங்களது தீவிரமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஒரு நாய்க்கு மானசிகமாக ஒலிபரப்ப முடியுமேயானால் நிச்சயமாக மனிதர்களுக்கும் மானசிகமாக ஒலிபரப்பு முடியும். இது நிருபிக்கப்பட்ட உறுதிபடுத்தப்பட்ட அறிவியல் உண்மை.

மானசிக ஒலிபரப்பினால் உங்கள் வாழ்க்ககையில் அதிசயிக்கத்தக்க நற்பயன் விளையக்கூடும். உதாரணமாக, உங்கள் நண்பர் பிரியா உங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை கவனிக்கிறீர்கள். இப்படித் தீவிரமாக நினைக்கிறீர்கள் “பிரியாவுக்கு நல்லெண்ணத்தை அஞ்சல் செய்து கொண்டிருக்கிறேன். அவரது வாழ்க்கையில் என்னால் மகிழ்ச்சி சேர்க்க முடியும் என்று நம்புகிறேன்!” (அவரது வாழ்க்கயைில் மகிழ்ச்சி சேர்க்க முடியும் என்ற நோக்கத்துடன் நல்லெண்ணத்தோடு அவருக்கு ‘ஹலோ’ சொல்லுகிறீர்கள். நீங்கள் மானசிகமாக அஞ்சல் செய்யும் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு அவர் பதில் வணக்கம் தெரிவிப்பார்).

முச்சந்தியில் நிற்கின்ற போலீஸ்காரருக்கும், ஊனமுற்ற சிறுவனுக்கும் அலுவலத்திலும் மளிகைக் கடையிலும், தொழிற்சாலையிலும் என தென்படுகின்ற ஒவ்வொருவருக்கும் – யார் எங்கிருந்தாலும் எல்லோருக்கும் – உங்கள் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் மானசிகமாக அஞ்சல் செய்யுங்கள்.

எங்கோ இருக்கின்ற முன்பின் தெரியாத மனிதர்களுக்கு உங்களுடைய மானசிக அஞ்சல் எப்படிப் போய்ச் சேரும் என்பதையோ, அவர்களின் மனம் அல்லது உள்மனம் எவ்வாறு அதை உணர முடியும் என்பதையோ பற்றி எண்ண வேண்டாம்

உங்களுடைய நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதருக்கும் அஞ்சல் செய்வதன் மூலம் உங்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டம் சிறப்படைந்து உங்களுடைய சொந்த ஆக்க சக்தியும் பன்மடங்காகப் பெருகும் என்பது நிருபிக்கப்பட்ட மனோதத்துவ உண்மையாகும்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Friday, October 22, 2010

சிந்தனைகள்

22 அக்டோபர் 2010

சிந்தனைகள்

  • நம் இதயத்தை ஒருவரின் மேல் செலுத்துவதற்கு முன் நாம் செலுத்தக்கூடிய அந்த மனிதருக்கு அதை பெற்றுக்கொள்ளக் கூடிய தகுதி உள்ளதா என்று நாம் ஆராய்வோம்.
  • நம் இதயத்தை ஒன்றின் மேல் செலுத்துவதற்கு முன் அது ஏற்கனவே இருப்பவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நாம் ஆராய்வோம்.
  • என்ன செய்ய முடியும் என்பதைவிட, என்ன செய்ய முடியாது என்று அறிந்து கொள்வது முக்கியம்.
  • ஒரு மனிதன் சந்தோஷமின்றி இருந்தால் அவனது சொந்தத் தவறுகள்தான் அதற்குக் காரணம் என்பதை நினைவில் வையுங்கள். ஏனெனில் கடவுள் எல்லோரையும் சந்தோஷமாகத்தான் படைத்திருக்கிறார்.
  • ஒரு மனிதன் தன் துறையில் மிகவும் வெற்றி பெற்று தனக்கென்று ஒரு பெயரை சம்பாதித்தால்தான் சர்வ வல்லமை படைத்தவனாகவும், அத்தியாவசியமானவனாகவும் தன்னைத்தானே கற்பனை செய்து கொள்கிறான்.
  • வேறு யாராகவும் இருக்க முயலாமல் தானாகவே தன் சொந்த இயல்பிலேயே இருக்க முயல்வதுதான் வீரமும் விவேகமுமாகும்.
  • செல்வங்களை அடைவதாலோ, தனிமனித வெற்றியாலோ கூட சந்தோஷத்தை அடைய முடியாது. ஆனால் மற்றவர்களுக்காக மற்றவர்களுடன் சேவை செய்வது ஒன்றே சந்தோஷத்தை அடையும் வழி.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe |Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Wednesday, October 20, 2010

பெண்மையின் நிலை

20 அக்டோபர் 2010

பெண்மையின் நிலை

சாதிக்க வேண்டும் என்று துடித்த ஒரு பெண்ணுக்குத் திருமணம் நடந்தது. கனவுகளும் கற்பனைகளுமாக இருந்தவளை வீட்டுக்குள் முடக்கியது கட்டுப்பாடு. குழந்தை பெற்றுக்கொடுத்து, வீட்டைக் கவனித்துக் கொண்டால் போதுமென வற்புறுத்தியது. ‘அடக்க ஒடுக்கமா இரு, இல்லையென்றால் அடி வாங்கியே செத்துவிடுவாய்’ என்று அன்பை(!)ப் பரிமாறினான் கணவன். மன உளைச்சலில் பாதிப்பைத்தியமாகவே மாறிய அந்தப் பெண், திடீரென்று ஒரு நாள் காணாமல் போனாள். ‘ஓடுகாலி’ எனப் பட்டம் சூட்டியது உலகம். மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத அந்தக் கணவனுக்கு இன்னொரு ‘அடக்கமான பெண்ணை’த் திருமணம் செய்து வைத்தார்கள்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Tuesday, October 19, 2010

மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்

20 அக்டோபர் 2010

மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்

1893-ம் வருடம் தென்னாப்பிரிக்காவின் ஆளரவற்ற ஒரு ரயில் நிலையத்தில் கடும் குளிரில் இரவைக் கழித்துக் கொண்டிருந்தான் 24-வயது இளைஞன். இரயில் பயணத்துக்கான முதல் வகுப்பு பயணச்சீட்டு வைத்திருந்தும், நிறவெறி காரணமாக கீழே இறக்கப்பட்ட அராஜகத்தை நினைத்துத் துடித்தான். வழக்கறிஞர் தொழில் செய்யும் தமக்கே இந்தக் கொடுமை நிகழ்கிறது என்றால், படிக்காத இளைஞா்களுக்கு என்னவெல்லாம் அநியாயம் நிகழும் என எண்ணிப் பார்த்தான்.

இந்த அநியாயத்தை எதிர்த்து நிற்பதா அல்லது இந்தியாவுக்கு திரும்பிவிடுவதா என்ற இரண்டே கேள்விதான் அப்போது அவனிடம் இருந்தது. இரவெல்லாம் சிந்தித்தவன், காலையில் சூரியன் கண்விழிப்பதற்குள் மிகத் தெளிவான போராளியாக மாறினான். அடிமைத்தனத்தையும், அராஜகத்தையும் எதிர்க்கத் துணிந்தான். போராட வேண்டுமாயின் பணபலம் மற்றும் ஆள்பலம் வேண்டும், உன்னிடம் இரண்டும் இல்லை என்பதால் தோற்றுவிடுவாய் என்று அவநம்பிக்கை விதைத்த நண்பர்களைப் பார்த்து “மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்” என்று போராட்டத்தைத் தொடங்கினான். அதில் வெற்றி பெறவும் தொடங்கினான். ஆம்…பாரதத்தின் தந்தை என்றழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான் அந்த இளைஞன். 21-ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்தியப் போராட்டத்தின் வெற்றியைக் கண்டுதான், இந்தியா அவரை கைநீட்டி அழைத்தது.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Monday, October 18, 2010

சோதனை

19 அக்டோபர் 2010

சோதனை

உலகையே சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின்! ஆனால் அவரது வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததே இல்லை. பிறந்ததில் இருந்தே துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள்! 1889-ல்…லண்டன் நகரில் சாப்ளின் பிறந்து ஓரிரு வருடங்களிலேயே பெற்றோரிடையே சண்டை வந்து விவாகரத்து அகிவிடவே, பேசத் தொடங்கும் முன்பே, தாயுடன் சேர்ந்து மேடையில் பாட வேண்டிய நிர்பந்தம். ஐந்து வயதுச் சிறுவனின் பாட்டுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு, ஏழு வயதிலேயே பறிபோனது. காரணம், அவரது தாயாரின் மனநிலை பாதிக்கப்பட்டதுதான்.

குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக முடிதிருத்தும் நிலையம், கண்ணாடித் தொழிற்சாலை, மருத்துவமனை என எங்கெங்கோ வேலைபார்த்தவர் சில காலம் தந்தையுடன் சேர்ந்து மேடை நாடகங்களிலும் நடித்தார். ஆனால் தந்தை திடீரென இறந்துவிடவே, மீண்டும் தொய்வு! 1910ல்…நாடகக் குழுவினருடன் அமெரிக்கா சென்றவருக்கு குறும்படங்கலில் நல்ல பெயர் கிடைத்தது. அவரது முத்திரை நடிப்பான ‘டிராம்ப்’ (பேகி பேண்ட், தொப்பி, கைத்தடி, வளைந்த கால்கள்) பிரபலமானது. ‘தி கிட்’ படத்தில் தொடங்கிய வரவேற்பு ‘தி கிரேட் டிக்டேட்டர்’ வரை நீடித்தது. ஆனால், இந்த காலகட்டங்களில் குடும்ப வாழ்வு அவரை பாடாய்ப் படுத்தியது.

1918-ல் நடந்த முதல் திருமணம் இரண்டு வருடம் மட்டுமே நீடித்தது. அதற்கு பின் நடந்த இரண்டு திருமணங்களும் கூட சாப்ளினுக்கு சோகத்தை மட்டுமே கொடுத்தன. 1920-ல் நான்காவது மனைவியாக ஓ ரெய்ல் அமைந்தபின் இல்லறத் தொல்லைகள் நின்றன. 1945-ம் ஆண்டு சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி என அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. இரண்டாவது மனைவி ஜோன் பெர்ரியும் சாப்ளின் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார். அவர் தரப்பு நியாயங்களை அமெரிக்க அரசு கேட்காததால், வேறு வழியின்றி, 1952-ல் கனத்த இதயத்துடன் சுவிட்சர்லாந்தில் அடைக்கலமானார் சாப்ளின்.

1972-ல்… காலச் சக்கரம் சுழல, அதே அமெரிக்க அரசு, ‘உலகின் தலைச்சிறந்த நகைச்சுவை நடிகர்’ விருதுபெற சாப்ளினை அழைத்தது. பரிசினை ஏற்றுக் கொண்டாலும், அமெரிக்காவில் தங்க விருப்பமின்றி, மீண்டும் சுவிட்சர்லாந்து திரும்பினார். விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து நின்று, “வாழ்நாள் முழுவதும் போர்களமாக இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?” எனக் கேட்டார்கள்.

சாப்ளின் சிரித்தார், “இந்த நிலை மாறிவிடும்” என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி… மாறிவிடும்! இதோ இந்த கணத்திலும் கூட! வறுமையில் பிறந்து, வாழ்வெல்லாம் போராடி, உலகையே தன் பெயரை உச்சரிக்க வைத்த அந்த நடிகனிற்கு, கலைஞனுக்கு ஏற்பட்ட சோதனை நம் வெற்றிக்கு நல்லசாவி.

“இந்த நிலை மாறிவிடும்”

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Sunday, October 17, 2010

தோல்வி

17 அக்டோபர் 2010

தோல்வி

ஒரு காரியத்தைச் சாதிக்க முற்பட்டு நீங்கள் தோல்வியடையும் ஒவ்வொரு முறையும் வெற்றிப்பாதையில் அடியெடுத்து வைக்கிறீர்கள் என்பதே உண்மை! நீங்கள் தடுமாறியபடி அடியெடுத்து வைத்திருக்கலாம். வெற்றி என்பது அநேகமாக முன்னோக்கித் தடுமாறி… முன்னோக்கி விழுந்து… விழும் போதெல்லாம் மீண்டும் எழுந்து கொள்வதைப் பொறுத்ததே!!! தோல்வி தவிர்க்க முடியாதது… அவசியமானது… உபயோகமானது… வெற்றியின் ஓர் அங்கமாக உள்ளது.

வெற்றியிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய பாடத்தைக் காட்டிலும் தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ளக்கூடிய பாடம் அதிகம். ஏனெனில் என்னென்ன செய்யக்கூடாது என்பதை தோல்வி உங்கள் மனத்தில் அழுத்தமாகப் பதித்து விடுகிறது. மறக்க முடியாதபடி பதித்து விடுகிறது. முதுகில் தட்டிக் கொடுக்கப்பட்டால் விரைவில் மறந்து போகும். கன்னத்தில் விழுந்த குத்து சீக்கிரத்தில் மறந்து போகாது. தோல்வியானது உங்களை வெற்றிக்குத் தயார்ப்படுத்துகிறது. இடுக்கண்களை வெல்வதற்குத் தேவையான பலத்தைக் கொடுக்கிறது. நீங்கள் வெற்றிகரமாகத் தோற்கக் கற்றுக் கொள்ள வேண்டும்! தோற்பதன் மூலம்தான் வெற்றி பெறுவது எப்படி என்று கற்றுக் கொள்ள இயலும். தோல்வி கற்றுத்தரும் விலை மதிப்பிட முடியாத பாடங்களைப் படித்துக் கொள்வது முக்கியமானது.

எது செல்லுபடியாகாது என்று தோல்வி உங்களுக்குச் சொல்லித் தரும். போதுமான முறை தோல்வியடைந்தீர்களானால், எது எதெல்லாம் செல்லுபடியாகதோ அவை அனைத்தையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான பாடம் தோல்வியைச் சரியான முறையில் சந்திக்க உதவக்கூடிய உணர்ச்சிப் பக்குவம்தான்! தோல்வியை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தோல்வியே உங்களுக்குக் கற்றுத் தரும்!

  • எதிரியின் குத்துக்கு இலக்காகாத அடியே வாங்காத குத்துச் சண்டை வீரர் யாரையாவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  • கால்பந்து விளையாட்டில் ஒரு முறை கூடக் கோட்டைவிடாத கோல்கீப்பர் இருக்க முடியுமா?
  • சந்தித்த ஒவ்வொருவரிடமும் வெற்றிகரமாக விற்பனை செய்த விற்பனையாளர் இருக்க முடியுமா?

ஒவ்வொருமுறையும் நீங்கள் வெற்றியடைய வேண்டும் என்று கட்டாயமில்லை… கிட்டத்தட்ட எல்லா முயற்சிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பதும் அவசியமில்லை.. போதிய முறை வெற்றியடைந்தாலே போதும். நீங்கள் விரும்பிய எதையும் அடைந்துவிடலாம்!

“நீங்கள் தோல்வியின் மூலம் வெற்றி பெற முடியும்”.

“சில முறையேனும் தோற்காமல் பெரிய வெற்றியை அடைவது என்பது இயலவே இயலாது”.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe.

Thursday, October 14, 2010

15 அக்டோபர் 2010

சிந்தனைகள்

· மனத்தை ஒருவன் வைத்திருக்கும் நிலையைப் பொறுத்தே அவன் அடையும் சந்தோஷம் இருக்கிறது.

· உண்மையான சந்தோஷம் என்பது நம்முள்ளே இருக்கும் ஒரு தன்மையால், வாழ்வைப் பற்றிய ஒரு சிந்தனையால் ஏற்படுகிறது. திருப்திக்கான வழிமுறைகள் நம்மிடையே இல்லாவிட்டால், பொருளாதார வெற்றிகள் முதல் எவ்வளவு வெற்றிகள் இருந்தாலும் அது நம்மை மகிழ்விக்காது.

· எதையாவது செய்வது, எதையாவது நேசிப்பது, எதையாவது நம்புவது இவைதான் வாழ்வில் சந்தோஷத்திற்கான அடிப்படைத் தேவைகள்.

· எவ்வளவு முறை தோல்வி பெற்றாலும் நீங்கள் வெற்றி பெறப் பிறந்தவர்கள். ஒரு காரியத்தை நன்கு செய்ததே அதன் வெகுமதிதான்.

· சந்தோஷம் என்பது பெரும்பாலும் கடும் உழைப்பால் ஏற்படுகிறது. வெறும் சிந்தனை, உணர்வு அல்லது உணர்ச்சியை அப்படியே சந்தோஷமாக அனுபவித்துவிடலாம் என்று கற்பனை செய்வது சிலர் செய்யும் தவறாகும். அழகை அருந்தமுடியுமா! சந்தோஷத்தை போராடிப் பெற வேண்டும். அது, மனிதர் வேலை செய்வதை விரும்புகிறது.

· தன்னிடம் இல்லாததற்காக வருந்தாமல், தன்னிடம் இருப்பதற்காக சந்தோஷமாக இருப்பவனே புத்திசாலியான மனிதன்.

· ஒவ்வொரு தலைமுறையும் பழமை தனக்குத் தந்த புதையலை சந்தோஷமாக அனுபவிக்கிறது. பிறகு புதிய சொத்துக்களை அப்புதையலில் சேர்த்துப் பெரிதாக்கி எதிர்காலத் தலைமுறைக்கு வழங்குகிறது.