ஒரு பெரியவர் தன் வீட்டின் வழியே சென்ற குளிரால் கஷ்டப்படுகிறவனை பார்த்து, உள்ளே அழைத்து அவனுக்கு கொஞ்சம் தேநீர் கொடுத்து உபசரித்தார்.
மற்றொரு நாள், தன் வீட்டின் வழியே குழந்தைக்கு ஒட்டு துணி கூட இல்லாமல் குளிரால் நடுங்கி கொண்டு சென்ற ஸ்திரி ஒருத்தியைய் அழைத்து அவளுக்கு உண்ண உணவும் உடுத்த உடையும் கொடுத்தார்.
தனது ஆப்பிள் கூடையில் இருந்த ஒரு பழத்தை எடுத்ததற்காக, வியபாரக்காரி அந்த சிறுவனை திருடா என்று சொல்லி அவன் முடியைய் இறுக்க பிடித்துக் கொண்டு உன்னை போலீஸீல் ஒப்படைக்கப்போகிறேன். அப்போது அந்த பெரியவர் கூறியது - ஒரு ஆப்பிளைத் திருடியதற்காக சவுக்கடி கொடுப்பது என்றால் நாம் செய்த எண்ணற்ற பாவங்களுக்கு நமக்கு எப்படிப்பட்ட தண்டனைகள் கொடுக்க வேண்டியிருக்கும்.
ஒரு நாள் அந்த பெரியவர் உட்கார்ந்து இருக்கும் போது கடவுள் அவரிடம் கூறியது,
- நான் பசியாக இருந்தேன் நீ எனக்கு உணவு அளித்தாய்.
- நான் தாகமாக இருந்தேன் நீ தாகம் தீர்த்தாய்
- நான் அன்னியனாக இருந்தேன் என்னை அன்புடன் அழைத்துக் கொண்டாய்.
பொருள் - எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்கு நாம் செய்யும் சேவையே கடவுளுக்கு நாம் செய்யும் உண்மையான சேவையாகும்.
- நன்றி: சிந்தனையாளர் டால்ஸ்டாய்
No comments:
Post a Comment