Wednesday, October 13, 2010

சிந்தனைகள்

14 அக்டோபர் 2010

சிந்தனைகள்

  • வெற்றியாளர்களின் வாழ்க்கையில் சில குணாதிசயங்கள் திரும்பத் திரும்ப வெளிப்படுகின்றன. விடாமுயற்சி, தன்முனைப்பு, செயல்திறன் மற்றும் தோல்விகளால் துவளாதது.
  • வெற்றி – வெற்றி பெற்றவர்கள் வெற்றிக்குக் காரணமாக கூறுவது அந்தச் செயல்பாடுகளைத்தான். சாதாரண வெற்றிக்கு சாதாரண முயற்சி போதும். தொடர் வெற்றிக்கு தொடர் முயற்சியும், நிரந்தர வெற்றிக்கு நிரந்தர முயற்சியும் தேவை என்பதை மறக்காதீர்கள்.
  • எந்தச் சூழ்நிலையிலும் இறுதி வெற்றியை அது அளிக்கும் மகிழ்ச்சியை எதிர்பார்த்து, அதற்காக எந்தத் துன்பத்தை தாங்கவும், எதிர்கொள்ளவும் தயாரானால் எதுவுமே நமக்கு பெரிதாக இருக்காது.
  • கடவுள் இருந்தால் அவனை நாம் காண வேண்டும். ஆத்மா இருந்தால் அதை நாம் உணர வேண்டும். அப்படியில்லை என்றால் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று.
  • சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்த்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன்முன் நிறுத்து; அதிலிருந்து நல்ல செயல்கள் விளையும்.
  • பகை, பொறாமை ஆகியவற்றை ஒருவன் வெளியிட்டால் அதெல்லாம் வட்டியும் முதலுமாக மீண்டும் அவனிடமே வந்து சேர்ந்துவிடும்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

No comments:

Post a Comment