12 அக்டோபர் 2010
வெற்றியின் இரகசியம்
தாமஸ் ஆல்வா எடிசன் வேறு எந்த மனிதரைக் காட்டிலும் அதிகமான தோல்விகளைச் சந்தித்தார். அந்த அனுபவ அறிவைக் கொண்டு வேறு எந்த மனிதரைக் காட்டிலும் அவர் அதிகமாக வெற்றி பெற்றது இயற்கை. 1093 கண்டுபிடிப்புகள் அவர் பெயரில் உள்ளன. ஞபாகமிருக்கட்டும் எடிசன் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் முயற்சி செய்த காரணத்தினால்தான் 1093 புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. கோடிக்கணக்கான டாலர்களைச் சம்பாதிக்கவும், மனித சமுதாயத்துக்கு அளவிட முடியாத தொண்டு செய்யவும் முடிந்தது. இந்தக் கண்டுபிடிப்புகளெல்லாம் கடுமையான உழைப்பின் பலன்களே தவிர, எங்கிருந்தோ வந்து குதித்த எண்ணங்களின் விளைவுகள் அல்ல! அவர் கூறியது போல, “ஒரு மேதையின் புத்திசாலித்தனம் - ஒரு சதவிகிதம் திடீரென்று உதிக்கும் யோசனைகளிலும், 99 சதவிகிதம் வியர்வையிலும் அடங்கியிருக்கிறது”. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைப்பதன் மூலம் அதை அவர் நிரூபித்துக் காட்டினார்.
மின்சாரத்தைக் தேக்கி வைக்கும் ஸ்டோரேஜ் பாட்டரியைக் கண்டுபிடிக்கப் பத்துவருடம் உழைத்தார்! அவரும் அவரது உதவியாளர்களும் 17,000 வகைத் தாவரங்களைப் பரிசோதித்துப் பாகுபாடு செய்து பின்னர் ஒரே ஒரு மரத்திலிருந்து லேடக்ஸ் என்னும் பொருளை வடிக்கும் முறையைக் கண்டுபிடித்து வெற்றி அடைந்தார்கள்! ஒரு முறை வெற்றியடையும் பொருட்டு 17,000 முறை தோல்வியடைய தயாராக இருந்தார்.
தோல்வி என்பது வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களில் ஒன்றே தவிர அதில் அவமானம் ஏதும் இல்லை. தோல்வி கற்றுத்தரும் பாடத்தை நீங்கள் ஆவலுடன் கற்க வேண்டும். தோல்வியைக் காட்டிலும் சிறந்த ஆசான் இருக்க முடியாது என்பதை உணருங்கள். நீங்கள் தோல்வி அடையும் போது அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு மீண்டும் முயற்சி செய்வீர்களேயானால் தோல்வியை நீங்கள் தோற்கடித்து விடுவீர்கள். வாழ்க்கையின் மிகமுக்கியமான வெற்றிப்பாடம் அதுதான். அதைப் படியுங்கள். படித்தாற்கேற்ப வாழ்ந்து காட்டுங்கள். வெற்றி கிடைப்பது உறுதி.
முக்கிய குறிப்பு: 1093 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான தாமஸ் எடிசன் (டாமி) பள்ளிக்கூடத்தில் படித்தது ஆறே மாதம்தான்.
குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe.
கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET
எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company
No comments:
Post a Comment