Saturday, October 9, 2010

நல்ல பழக்கம்

11 அக்டோபர் 2010

நல்ல பழக்கம்

ஒரு சமயம் நபிகள் நாயகம் மேடையில் பேசிக் கொண்டு இருந்தார். அப்பொழுது அந்தக் கூட்டத்தில் இருந்த குடிகாரன் ஒருவன் எழுந்து நபிகள் நாயகத்திடம் எனக்கு இஸ்லாம் மதத்திலே இடம் உண்டா? என்று கேட்டான். உடனே பக்கத்தில் இருந்த ஒருவன், “குடிகாரனுக்கு இஸ்லாம் மதத்திலே இடம் கிடையாது என்றார். உடனே நபிகள் நாயகம் அப்படிக் கூறியவரைப் பார்த்து கையமற்த்திவிட்டு, உமக்கு இஸ்லாம் மதத்தில் இடம் உண்டு” என்றார். அப்படி என்றால், நான் அதிலே சேர்ந்துக் கொள்ளலாமா என்றான். “இறைவனை தொழுகும் பொழுது மட்டும் குடிக்கக் கூடாது” என்றார். “சரி என்று ஒத்துக் கொண்டான் அந்தக் குடிகாரன். கலிமா சொல்லப்பட்டது. முறைப்படி அவன் இஸ்லாம் மதத்திலே சேர்ந்தான். தொழுகைக்குப் போகும்போது மட்டும் குடிக்க முடியாத நிலைமை அவனுக்கு.

சிறிது நாட்கள் ஆகியது. நபிகள் அவனைப் பார்த்து, “காலையில் மட்டும் தொழுதால் போதாது! மாலையிலும் தொழ வேண்டும்” என்றார். அவன் இரண்டு வேலையும் தொழ ஆரம்பித்தான். இரண்டு நேரமும் குடிக்காமல் இருந்தான். அப்புறம், சிறது நாட்கள் கழித்து பகலிலும் ஒரு முறை தொழ வேண்டும் பிறகு அந்திப் பொழுதிலும் ஒரு முறை தொழ வேண்டும் என்றார் நபிகள். அவன் படிப்படியாக அந்தப் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டான்.

ஐந்து வேலையும் தொழ ஆரம்பித்துவிட்டான். ஐந்து வேலையும் அவனால் குடிக்க முடியாமல் போயிற்று! அப்புறம் தொழுகைக்குப் போய்க் கொண்டு இருந்தபொழுது. நபிகள் அவரைப் பார்த்து, “இறைவனைத் தொழப் போகும் பொழுது மட்டும் குடிக்காமல் இருந்து பயனில்லை, தொழுதுவிட்டு வந்தப்பிறகும் குடிக்காமல் இருக்க வேண்டும்” என்றார். அவன் அதற்கும் “சரி” என்று ஒத்துக் கொண்டான். இறுதியில் அந்த குடிகாரருக்கு குடிப்பதற்கே நேரமில்லாமல் ஆகிவிட்டது.

எல்லாமதமும் இறைவனோடு அடிக்கடி தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வது எதற்காக? நல்ல பழக்க வழக்கங்கள் வர வேண்டும் என்பதற்காகத்தான்.

இறைவனை உள்ளத்திலே உளமாற பாடுவோம். தீய பழக்க வழக்கங்களை அறவே மறப்போம்!

நல்ல பழக்க வழக்கங்களை பெறுவோம். நலம் பெறுவோம்!!

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

No comments:

Post a Comment