25 நவம்பர் 2010
சந்தோஷம்
- அடுத்தவர்களைப் பற்றி நாம் சிந்தித்து அவர்களுக்காக ஏதாவது செய்யாவிட்டால், சந்தோஷத்திற்கான சிறந்த வழியை இழந்துவிடுகிறோம்.
- பெறுவதிலோ, வைத்திருப்பதிலோ சந்தோஷம் இல்லை. தருவதில்தான் சந்தோஷம் இருக்கிறது.
- சந்தோஷம் என்பது நறுமணத் திரவியத்தைப் போல. உங்கள் மீது சில துளியாவது படாமல் உங்களால் அடுத்தவர் மேல் அதைத் தெளிக்க முடியாது.
- ஒரு மனிதனிடம் என்ன இருக்கிறது என்பதைவிட அவன் என்னவாக இருக்கிறான் என்பதே அவனுக்கு சந்தோஷத்தைத் தருகிறது.
- ஒரு மனிதன் தனியாக இருக்கும்போது அவனிடம் என்ன இருக்கிறது, எதை யாராலும் அவனுக்குத் தர முடியாது அல்லது அவனிடமிருந்து எடுத்து செல்ல முடியாது என்பது நிச்சயம் அவனிடம் இருக்கும் செல்வங்களைவிட, உலகின் கண்களுக்கு அவன் எப்படித் தென்படுகிறான் என்பதைவிட அவசியமானதாகும்.
- சுவையான கருத்துக்களை சிந்திப்பவனே மிகவும் சந்தோஷமான மனிதன்.
- உள்ளிருக்கும் எண்ணங்கள், உணர்வுகளிலிருந்து வரும் சந்தோஷம்தான் உங்களுடனேயே நிலைத்து நிற்கிறது.
குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe | Donate for this Service.
கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET
எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company
No comments:
Post a Comment