7 செப்டம்பர் 2010
மன ஒருமைப்பாடு
மனதை ஒரு முகப்படுத்த கற்றவன் ‘மகான்’ ஆவான். இதனை சுவாமி விவேகானந்தர் இவ்வாறு கூறுகிறார்.
- கல்வியின் அடிப்படையான இலட்சியமே மனதை ஒருமுகப்படுத்துவதுதான். மனதை ஒரு முகப்படுத்துகிற அளவுக்கு அறிவு வளர்ச்சியும் அதிகமாகும்.
- நான் மறுபடியும் கல்வி கற்பதாக இருந்தால் வெறும் புள்ளி விவரங்களை படிக்கமாட்டேன். முதலில் மனத்தை ஒரு முகப்படுத்தும் ஆற்றலையம், நல்ல பண்பாட்டையும் வளர்த்துக் கொள்வேன். அதன் பிறகு பண்படுத்தப்பட்ட அந்தக் கருவியைக் கொண்டு நினைத்த நேரத்தில் உண்மைகளை சேகரித்துக் கொள்வேன்.
மனஒருமைப்பாடு பற்றி உலக வரலாறு கூறுவது:
- ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி இவ்வாறு கூறுகிறார் – ஒரு நாள் நள்ளிரவு நேரம். அழகிய மனைவி. இளம் வயதினாள். அவள் தூங்கவில்லை. கவிஞனும் தூங்கவில்லை. எழுதுகோல் அவன் கையில் இருக்கிறது. அவன் பார்வை எங்கோ எட்டாத தொலைவில் எதையோ துழாவிக் கொண்டிருக்கிறது. படுத்துக் கொண்டு இருக்கும் மனைவியின் கண்களோ கணவன் எப்போது எழுந்து வருவார் என்று ஏங்குகின்றன.
அவன் எழுதுகிறான். இவளோ ஏங்குகிறாள். எழுந்து அவனை நெருங்கிச் செல்வதற்கு அடியெடுத்து வைத்தாள். மெதுவாக, மிக மெதுவாகத்தான் அவள் வந்தாள். ஆனாலும் கவிஞன் சொன்னான்…‘பெண்ணே? மெதுவாக நட – என் கனவுகளைக் கலைக்காதே என்று…’. ஆம், நுண்ணிய மென் பொருளைத் தேடி பயணம் போகும் கவிஞனின் இதயம் மனைவியின் பூப்பாதம் எழுப்பும் மெத்தென்ற ஒலியையும் சகிக்க மறுக்கிறது.
- வில் வித்தையில் வித்தகர் அர்ச்சுனனின் மன ஒருமைப்பாடு. மரத்தின் உச்சியிலிருக்கும் பறவையை ஒரே அம்பில் வீழ்த்த வேண்டும் என்பது போட்டியின் நிபந்தனை. வில் வளைந்து நாணேற்றிக் குறி பார்த்த அர்ச்சுனனுக்குப் பறவையின் கழுத்து மட்டுமே தெரிந்தது. விட்டார் அம்மை, விழுந்தது பறவை. வில்வித்தையில் வெற்றி வீரனானான். கழுத்து மட்டுமே எப்படித் தெரிந்தது? மற்ற சிந்தனைகள் எதுவும் அவன் உள்ளத்தில் புகவில்லை – புகுமாறு விடவில்லை. எனவே அவன் கண்கள் பார்க்க வேண்டியதை மட்டுமே பார்த்தன. ஆனால், அர்ச்சுனனைத் தவிர மற்றவர்களது கண்களோ மரத்தின் கிளைகளையும் இலைகளையும் அவற்றோடு பறவையையும் பார்த்தன.
- நெப்போலியன் மன ஒருமைப்பாடு – நெப்போலியன் தனது உள்ளத்தைப் பல அறைகள் கொண்ட ஒரு கூண்டிற்கு ஒப்பிடுகிறார். ஓர் அறையினைத் திறந்து வைத்திருக்கும் போது, அதாவது ஒரு பொருளைப் பற்றிச் சிந்திக்கும் போது மற்ற எல்ல அறைகளையும் அடைத்து வைத்து விடுவாராம்.
கல்வி உதவித்தொகை வழங்கும் விழா: நமது டாக்டர் இராதகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளையின் இந்த வருடத்திற்கான உதவித் தொகை வழங்கும் விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவிற்கு உதவி ஏழைக் குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்திட விரும்பினால் எம்மைத் தொடர்பு கொள்ளவும். தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - +91-97380 10000.
கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET
எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company
No comments:
Post a Comment