Thursday, September 2, 2010

கஷ்டம்




இந்த தலைப்பைப் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறோம். இருந்தாலும் மீண்டும் இந்த தலைப்பைப் பற்றி எழுத ஆசைப்படுகிறேன். ஏற்கனவே கூறியது போல பிறப்பால் நாம் அனைவரும் சமம். யாரையும் எந்தக் கஷ்டமும் திடீரென்று தாக்குவதில்லை. ஆனாலும் விபத்துக்கள், திடீர் வியாதி போன்றவை மனிதனின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களையும், தாக்கங்களையும் ஏற்படுத்தும் வலிமை உள்ளவை. ஆனால் இது போன்ற சந்தர்ப்பங்களில் நடந்ததை ஏற்றுக்கொண்டு அடுத்தது என்ன என்று முயற்சிப்பவர்களைத் துரதிருஷ்டம் கூட முழுவதும் அழிப்பதில்லை.



ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) என்ற புகழ்பெற்ற விஞ்ஞானியை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவரது புகைப்படங்களைப் பார்த்தால் ஒரு சக்கர நாற்காலியில் மிகப்பல உபகரணங்களுடன் தடித்த கண்ணாடி அணிந்திருக்கும் மனிதராக காட்சியளிப்பார். இவர்தான் உலகப் புகழ்பெற்ற கால நேரம் பற்றிய ஆய்வு நூலான A Brief History of Time என்ற நூலை எழுதியவர். 1995ல் வெளிவந்த இந்த நூல் அடுத்த 5 வருடங்களுக்கு மிக அதிகமாக விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.



ஹாக்கிங் பிறக்கும் போதே இது போல உடல் இயக்கங்கள் இழந்த நிலையில் பிறக்கவில்லை. தனது 21ம் வயது வரை மற்றவர்களைப் போல நடமாடிக் கொண்டுதான் இருந்தார். அந்தச் சமயத்தில்தான், அனிச்சை செயல்களைச் செய்விக்கும் நரம்பு மண்டலப் பாதிப்பு ஏற்படுத்தும் வியாதி அவர் மூலையைத் தாக்கியது. ஏ.எல்.எஸ் (ALS) என்று சுருக்கமாகக் குறிப்பிடும் இந்தக் கொடூர வியாதியால் இவரது செயல்பாடுகள் நடமாட்டம் எல்லாம் முழுமையாக முடங்கிப் போயின. இரண்டு வருடங்கள்தான் வாழ முடியும் என மருத்துவர்கள் நாள் குறித்தனர். ஆனால், இப்போது அவருக்கு வயது 67. இன்றுவரை அவரது இறப்பைப் பற்றி உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் ஒரு சில வலைதளங்கள் அவர் இறந்து விட்டதாக கூறுகிறது மற்றும் சில செய்திகள் அவர் கொல்லப்பட்டதாக கூறுகிறது.



அவர் இருந்தாலும், இறந்தாலும் அவரது சாதனைகள் இன்றும் மக்கள் மனதில் உலாவந்து கொண்டு இருக்கிறது.

அவரது சாதனைகள்:

* 1975 - Eddington Medal
* 1976 - Hughes Medal of the Royal Society
* 1979 - Albert Einstein Medal
* 1981 - Franklin Medal
* 1982 - Order of the British Empire (Commander)
* 1985 - Gold Medal of the Royal Astronomical Society
* 1986 - Member of the Pontifical Academy of Sciences
* 1988 - Wolf Prize in Physics
* 1989 - Prince of Asturias Awards in Concord
* 1989 - Companion of Honor
* 1999 - Julius Edgar Lilienfeld Prize of the American Physical Society
* 2003 - Michelson Morley Award of Case Western Reserve University
* 2006 - Copley Medal of the Royal Society
* 2008 - Fonseca Price of the University of Santiago de Compostela
* 2009 - Presidential Medal of Freedom, the highest civilian honor in the United States

தனது உடல் குறைபாடுகள் இருந்தும், சாதனைகள் புரிந்தது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் உதாரணமாகத் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவரைப் போன்றவர்களின் வாழ்க்கையை பார்க்கும்போது நமது வாழ்க்கையில் ஒரு போதும் கஷ்டம் கிடையாது.

No comments:

Post a Comment