நேரம்
ஒரு நிமிடத்திலுள்ள அறுபது நொடிகளையும் நம்மில் பலர் முழுவதுமாகப் பயன்படுத்துவது இல்லை. இவ்வாறு வீணாகும் நொடிகள் சேர்ந்து இழந்த நிமிடங்கள் ஆகின்றன. இழந்த நிமிடங்கள் சேர்ந்து இழந்த மணிகள் ஆகின்றன. இழந்த மணிகள் இழந்த நாள்களாகவும், நாள்கள் ஆண்டுகளாகவும், ஆண்டுகள் பயனற்ற வாழ்நாளாகவும் ஆகின்றன. அத்தகைய வாழ்நாளில் செய்து முடிக்கப்படாமல் பல விஷயங்கள் நின்று விடுகின்றன.
நேரம் என்பது மனிதனின் கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியாத ஒன்று. யாருக்காகவும் காத்துக் கொண்டிராது. விலை மதிப்பற்ற இதனை எவ்வளவு புத்திசாலித்தனமாக நாம் பயன்படுத்துகிறோம்? வாழ்நாளில் மூன்றில் ஒருபங்கு உறக்கத்தில் கழிகிறது. பத்தில் ஒரு பங்கு குளிப்பது, அழகுபடுத்திக் கொள்வது ஆகியவற்றில் செலவாகிறது. ஆறில் ஒரு பங்கு நேரத்தை உறவினர்கள் நாண்பர்களுடன் பேசுவதில் கழிக்கிறோம். இவ்வாறு பல விதத்திலும் 70 சதவிகித நேரம் செலவழிந்து விடுகிறது. பணியாற்றுவதற்காக எஞ்சியிருப்பது 30 சதவிகிதம் தான்.இந்த அருமையான 30 சதவீகித நேரத்தை முழு மனதுடன் பணியாற்றிடுவோம். இந்த 30 சதவீதத்தில் நாம் அடையும் வெற்றியும் பலனும் தான் நமது மீதியிருக்கும் 70 சதவீதத்தின் சந்தோசத்திற்கு மூலதனமாக அமையப்பெரும்.
சோம்பல் இல்லாத் தொழில், சோதனை இல்லாத் துணை!!!
No comments:
Post a Comment