உள்ளுணர்வு… நம்மில் பழக்கப்பட்ட பல விஷயங்களை நாம் அறியாமலேயே செய்கிறோம். உதாரணமாக, பல் துலக்கும் பழக்கம். காலை எழுந்தவுடனேயே தன்னிச்சையாக நமது கைகள் நம்மை அறியாமலேயே குளியலறைக்குச் சென்று பல்துலக்கும் தூரிகையைய் எடுக்கிறது.இவ்வாறு உள்ளுணர்வு தன்னிச்சையாக செய்வதைப் பற்றி ஆல்டஸ் ஹட்ஸ்லி இவ்வாறு கூறுகிறார். “வாழ்க்கையில் எல்லா நடவடிக்கைகளிலும் மிக அற்பமானதிலிருந்து மிக முக்கியமானது வரை ஒன்றுக் கொன்று பொருந்தாத இரண்டு நிலைகளை இணைப்பதில்தான் திறமை அடங்கியுள்ளது”.
- அதிக அளவு செயல், அதிக அளவு ஓய்வு.
- ஓய்வு பெற வேண்டியது தன்முனைப்பும் உள் மனமும்.
- செயல்பட வேண்டியது உயிருள்ள ஆத்மா.
இந்த உள்மனம் ஓய்வு பெற வேண்டியதையே ஒரு கவிஞர் இவ்வாறு கூறுகிறார்…”ஒரு நல்ல நாள், ஒரு நல்ல இரவுத் தூக்கத்திற்கு பிறகுதான் ஆரம்பமாகிறது”. இதை நன்கு உணர்ந்தவர் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள். இதற்காக அவர் செய்த சுயபரிசோதனை உண்ணாவிரதம், வாரம் ஒரு முறை பேசாதிருத்தல் போன்றவைகளே. நம்மை வசப்படுத்தி ஆள நமக்குத் தெரிந்தால், நம்மால் சுயபரிசோதனை செய்ய முடியும். நாம் செய்வது சரியா, தவறா என்று நாமே தீர்மானிக்க முடியும். நம்மை நாமே ஆராய்ந்து கொள்ளும் போது செயல்கள், முடிவுகள் மற்றும் செயல் முறைகள் பற்றி எல்லாம் விளக்கமாகத் தெரிகிறது. ஓர் இலட்சிய நோக்கும் பாரபட்ச மற்ற மனமும் ஏற்படுகிறது.
“ஒரு சக்தி வாய்ந்த மனிதன் உள்ளத்தில் தோன்றும் ஒற்றை எண்ணம் தான், மாபெரும் நன்மை, தீமைகளைச் செய்கிறது. ஒற்றை எண்ணம் தான் பிரமிடைக் கட்டியது; இஸ்லாமைக் கண்டது; அலெக்சாண்டிரின் நூலகத்தை எரித்தது; தொழுநோயைய் அறவே ஒழித்தது”.
நல்ல பதிவு, தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteதமிழ்மணத்திலும், தமிழிஷிலும் சேர்ந்திருக்கிறீர்களா? பெரிதான வட்டத்திற்கு உங்கள் பதிவு சென்றுசேரும்.
சேர்ந்துள்ளோம் நண்பரே.
ReplyDeleteஉங்களது கருத்துக்கு மிக்க நன்றி!