17 டிசம்பர் 2010
சிந்தனைகள்
· கல்வியின் அடிப்படையான இலட்சியமே மனதை ஒரு முகப்படுத்துவதுதான். மனதை ஒரு முகப்படுத்துகிற அளவுக்கு அறிவு வளர்ச்சியும் அதிகமாகும்.
· கல்வி, தன்னம்பிக்கை இவற்றின் மூலமே நம்முன் மறைந்திருக்கும் தெய்வீக சக்தியை நாம் வெளிபடுத்த முடியும்.
· ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலை நிறுத்த முடியும்.
· ஒருவனுடைய உண்மைத் தன்மையை ஆராய வேண்டின் அவனது பெருஞ் செயல்களைப் பார்க்க வேண்டாம்; அவன் தன் சாதாரண காரியங்களை எங்ஙனம் செய்கிறான் என்பதை கவனிக்க வேண்டும். அவை தாம் ஒருவனுடைய உண்மைத் தன்மையை வெளிகாட்டும். சில சமயங்களில் கயவரும் புகழ்பெறுவதுண்டு. எந்த நிலையிலும் பெருந்தன்மையுடன் நடப்பவனே உண்மையில் பெரியோனாவான்.
· நம் எண்ணங்களே நம் தன்மையை உண்டாக்கியிருக்கின்றன. இரும்பின் மேல் சம்மட்டி அடிக்கும் ஒவ்வோர் அடியும் அதன் உருவத்தைத் தீா்மானம் செய்வது போல், நம் ஒவ்வோர் எண்ணமும் நம் தன்மையைத் தீர்மானம் செய்கிறது. வார்த்தைகள் அவ்வளவு முக்கியம் அல்ல; எண்ணங்களே மிக முக்கியமானவையாகும்.
குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe |Donate for this Service.
கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET
எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company
No comments:
Post a Comment