Friday, September 3, 2010

சிந்தனைகள்

3 செப்டம்பர் 2010

சிந்தனைகள்

· ஒரு மனிதன் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்கிறானோ, அந்த அளவுக்குத்தான் அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

· எதையும் சிறப்பாகவும், முழுமையாகவும் நாம் செய்ய வேண்டுமானால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. கற்பனையில் அதைப் பயிற்சி செய்வதுதான் அந்த வழி.

· நமக்கு என்ன கிடைத்திருக்கிறதோ அதைப்பற்றி நாம் அதிகம் எண்ணிப் பார்ப்பதில்லை. எது நம்மிடம் இல்லையோ அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

· நீங்கள் விரும்பாதவர்களைப் பற்றி சிந்தித்து ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காதீர்கள்.

· மனச் சுமையை இறக்கிவைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மனதைக் குடைவது எதுவானாலும், அதனை உடனுக்குடன் பேசி வெளியேற்றி விடுங்கள்.

· காரியத்தைச் செய்யுங்கள்; சக்தி தானாகவே வரும்.

· மனிதன் எதை நினைத்தாலும், எதை நம்பினாலும், அதை சாதிக்க முடியும். தயக்கமோ அச்சமோ இன்றி வேலையைத் தொடங்குங்கள். செய்யத் தொடங்கிவிட்டால், செய்வதற்குத் தேவையான சக்தி உங்களுக்குத் தானாகவே கிடைத்துவிடும்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org Subscribe Unsubscribe.

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா: நமது டாக்டர் இராதகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளையின் இந்த வருடத்திற்கான உதவித் தொகை வழங்கும் விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவிற்கு உதவி ஏழைக் குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்திட விரும்பினால் எம்மைத் தொடர்பு கொள்ளவும். தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - +91-97380 10000.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Thursday, September 2, 2010

கஷ்டம்




இந்த தலைப்பைப் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறோம். இருந்தாலும் மீண்டும் இந்த தலைப்பைப் பற்றி எழுத ஆசைப்படுகிறேன். ஏற்கனவே கூறியது போல பிறப்பால் நாம் அனைவரும் சமம். யாரையும் எந்தக் கஷ்டமும் திடீரென்று தாக்குவதில்லை. ஆனாலும் விபத்துக்கள், திடீர் வியாதி போன்றவை மனிதனின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களையும், தாக்கங்களையும் ஏற்படுத்தும் வலிமை உள்ளவை. ஆனால் இது போன்ற சந்தர்ப்பங்களில் நடந்ததை ஏற்றுக்கொண்டு அடுத்தது என்ன என்று முயற்சிப்பவர்களைத் துரதிருஷ்டம் கூட முழுவதும் அழிப்பதில்லை.



ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) என்ற புகழ்பெற்ற விஞ்ஞானியை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவரது புகைப்படங்களைப் பார்த்தால் ஒரு சக்கர நாற்காலியில் மிகப்பல உபகரணங்களுடன் தடித்த கண்ணாடி அணிந்திருக்கும் மனிதராக காட்சியளிப்பார். இவர்தான் உலகப் புகழ்பெற்ற கால நேரம் பற்றிய ஆய்வு நூலான A Brief History of Time என்ற நூலை எழுதியவர். 1995ல் வெளிவந்த இந்த நூல் அடுத்த 5 வருடங்களுக்கு மிக அதிகமாக விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.



ஹாக்கிங் பிறக்கும் போதே இது போல உடல் இயக்கங்கள் இழந்த நிலையில் பிறக்கவில்லை. தனது 21ம் வயது வரை மற்றவர்களைப் போல நடமாடிக் கொண்டுதான் இருந்தார். அந்தச் சமயத்தில்தான், அனிச்சை செயல்களைச் செய்விக்கும் நரம்பு மண்டலப் பாதிப்பு ஏற்படுத்தும் வியாதி அவர் மூலையைத் தாக்கியது. ஏ.எல்.எஸ் (ALS) என்று சுருக்கமாகக் குறிப்பிடும் இந்தக் கொடூர வியாதியால் இவரது செயல்பாடுகள் நடமாட்டம் எல்லாம் முழுமையாக முடங்கிப் போயின. இரண்டு வருடங்கள்தான் வாழ முடியும் என மருத்துவர்கள் நாள் குறித்தனர். ஆனால், இப்போது அவருக்கு வயது 67. இன்றுவரை அவரது இறப்பைப் பற்றி உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் ஒரு சில வலைதளங்கள் அவர் இறந்து விட்டதாக கூறுகிறது மற்றும் சில செய்திகள் அவர் கொல்லப்பட்டதாக கூறுகிறது.



அவர் இருந்தாலும், இறந்தாலும் அவரது சாதனைகள் இன்றும் மக்கள் மனதில் உலாவந்து கொண்டு இருக்கிறது.

அவரது சாதனைகள்:

* 1975 - Eddington Medal
* 1976 - Hughes Medal of the Royal Society
* 1979 - Albert Einstein Medal
* 1981 - Franklin Medal
* 1982 - Order of the British Empire (Commander)
* 1985 - Gold Medal of the Royal Astronomical Society
* 1986 - Member of the Pontifical Academy of Sciences
* 1988 - Wolf Prize in Physics
* 1989 - Prince of Asturias Awards in Concord
* 1989 - Companion of Honor
* 1999 - Julius Edgar Lilienfeld Prize of the American Physical Society
* 2003 - Michelson Morley Award of Case Western Reserve University
* 2006 - Copley Medal of the Royal Society
* 2008 - Fonseca Price of the University of Santiago de Compostela
* 2009 - Presidential Medal of Freedom, the highest civilian honor in the United States

தனது உடல் குறைபாடுகள் இருந்தும், சாதனைகள் புரிந்தது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் உதாரணமாகத் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவரைப் போன்றவர்களின் வாழ்க்கையை பார்க்கும்போது நமது வாழ்க்கையில் ஒரு போதும் கஷ்டம் கிடையாது.

Tuesday, August 11, 2009

பிள்ளைகளின் அன்பு

ஒரு கழுகு தனது மூன்று குஞ்சுகளுடன் ஆற்றங்கரை மரம் ஒன்றில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. திடீரென்று ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, நீர் மட்டம் மெல்ல உயர்ந்தது.

ஆபத்தை உணர்ந்த கழுகு, சரியாக பறக்க இயலாத தனது குஞ்சுகளை எப்படியாவது காப்பாற்ற முனைந்தது.

முதல் கட்டமாக குஞ்சு ஒன்றை தன கால்களில் இடுக்கிக்கொண்டு, ஆபத்தில்லாத ஓரிடத்தை நோக்கி பறந்தது. அப்போது, கழுகின் மனதில் திடீரென்று ஒரு சிந்தனை.

"நான் துன்பபட்டாலும், என் குழந்தைகளைக் காப்பாற்ற பெரும் முயற்சி செய்கிறேன். ஆனால், எனக்கு வயதாகி, உடல் வலிமை எல்லாம் குன்றிப் போன பின், என் குழந்தைகள் இப்படி என்னை கவனிப்பார்களா?"

இந்தக் கேள்வியை தான் தூக்கிசெல்லும் குஞ்சிடம் கேட்டது கழுகு. "எங்கே ....முடியாது" என்றால், தாய்க் கழுகு தன்னை தண்ணீரில் தவற விட்டுவிடுமோ?" என்று பயந்த கழுகுக் குஞ்சு, "நிச்சயம் கவனித்துக் கொள்வேன். எனது வாழ்க்கையையே உனக்காக அற்பனிப்பேன்" என்றது. அதன் நடுக்கமான குரலில் இருந்தே, "குஞ்சு சொல்வது தன மீதுள்ள பயத்தினாலேயே தவிர, உண்மையாக அல்ல" என்பதை புரிந்துகொண்ட கழுகு, தனது குஞ்சை சுமந்து போய் மரம் ஒன்றின் மேல் பத்திரமாக விட்டு விட்டு திரும்பியது. பிறகு, இரண்டாவது குஞ்சியிடமும் இதே கேள்வியை கேட்டது. அதுவும் இதையே சொல்ல, அதையும் பத்திரமாக விட்டு விட்டு வந்தது.

இப்போது மூன்றாவது குஞ்சை தூக்கிக்கொண்டு பறந்த கழுகு, அதனிடமும் அதே கேள்வியை கேட்டது. மூன்றாவது குஞ்சு கோபத்தில் கொதித்தது. " உனக்கு இந்த சுயநலம் எங்கிருந்து வந்தது.? எப்படி, உன் குழந்தைகள் மீது உனக்கு எந்த எதிர்ப்பார்ப்புமில்லாத அளவிட முடியாத பாசம் உள்ளதோ, அதே போன்று எனக்கும் என் குழந்தைகள் மீதுதான் பாசம் இருக்கும். என் தாயான உன் மீது எனக்கு அன்பு உள்ளது. என்னை வளர்க்க நீ பட்ட பாடு எல்லாம் நானறிவேன். அதற்கான நன்றி உணர்ச்சியும் எனக்கு உண்டு. எனவே, தேவைப்படும்போது உனக்கு என்னாலான உதவியை அவசியம் செய்வேன். ஆனால், என் குழந்தைகள் மீது எனக்குள் இயற்கையாக பெருகும் பாசத்துக்கு ஈடு-இணையே கிடையாது" என்றது தாய்க் கழுகை நோக்கி.

அதன் சொற்களில் இருந்த உண்மை தாய்க் கழுகின் உள்ளத்தை தொட்டது. தன குஞ்சை முத்தமிட்ட கழுகு, பெருமிதத்துடன் அதை அனைத்துக் கொண்டு, தங்களது எதிர்காலத்தை நோக்கி பறந்தது.

உலக இயல்பு இப்படி இருக்க, பிள்ளைகளையும் நம் போல் எண்ணி, அவர்களிடம் நமக்கு மட்டுமே முழு அன்பையும் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.

ஒரே ஒரு முறைத்தான் வாழப்போகிறோம், அதில் இந்த தலைமுறையுடன் சிறப்பாக வாழ கற்றுக்கொள்வோம்.

Monday, June 29, 2009

சிந்தனைகள்

    • நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது சுலபமே ஆகும். தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும்.



    • சிறு திட்டங்களை தீட்டாதீர்கள், நம் இரத்தத்தைக் கிளர்ந் தெழச் செய்யும் சக்தி அவற்றிற்கில்லை…. பெருந் திட்டங்களைத் தீட்டுங்கள்; நம்பிக்கையுடன் உயர்ந்தவற்றைக் குறி வைத்து வேலை செய்யுங்கள்.


    • சுய கெளரவம் என்பது நம்மைப் பற்றி நாம் எப்படி எண்ணுகிறோம் என்பதே ஆகும். நம்மைப் பற்றிய நம் எண்ணமானது நம் வேலையில் நம் செயல்திறன் நம் உறவு முறைகள், பெற்றோர்களாக நாம் செயல்படும் விதம், வாழ்வில் நாம் சாதிப்பவை போன்ற எல்லாவற்றையும் மாற்றும் சக்தி கொண்டது. சுயகெளரவம் என்பது வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Thursday, June 25, 2009

எது அழகு

தத்துவ ஞானி சாக்ரடீஸிடம் ஒரு முறை, ''எது அழகு?'' என்று கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு சாக்ரடீஸ் தந்த பதில்: ''பானையில் உணவு இருக்கிறது. அதை எடுக்க உதவுவது எது? தங்கக் கரண்டியா... மர அகப்பையா? எது பயனுள்ளதாக இருக்கிறதோ, அதுவே அழகு என்றாராம்”.

Tuesday, June 23, 2009

புகழ்


புக்கர் டி வாஷிங்டன் என்ற அமெரிக்க புரொபசர், எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். இவர், பிரபலமாகாத காலகட்டம். ஒருமுறை, அருகிலிருந்த தேவாலயத்துக்குச் சென்றார் புக்கர் டி வாஷிங்டன். கறுப்பினத்தவர் என்பதால், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். ''நீங்கள் என்னை உள்ளே விடாவிட்டால் பரவாயில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கடவுள் எனக்குச் சொல்வார்'' என்று கூறிவிட்டுத் திரும்பினார் அவர். காலங்கள் நகர்ந்தன. புக்கர் டி வாஷிங்டன் எழுதிய பல புத்தகங்கள், அவருக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தன. சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு, மீண்டும் அந்த தேவாலயத்துக்குச் சென்றார் அவர். அப்போதும் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காதவர்கள், ''என்ன... கடவுள் ஏதாவது சொன்னாரா?'' என்று அவரது பழைய வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்டு, ஏளனமாகக் கேள்வி கேட்டனர்.

உடனே புக்கர் டி வாஷிங்டன், ''இப்போது, நான் உங்களைப் பார்க்கவே வந்தேன். சர்ச்சுக்கு வரவில்லை. ஏனென்றால், கடவுள் என்னிடம், 'நானே அந்த சர்ச்சுக்கு செல்வதில்லை. நீ ஏன் செல்கிறாய்?' எனக் கேட்டு விட்டார்'' என்றாராம்

Monday, June 22, 2009

முதல் நாளிலேயே ஞானோதயம்

தன்னைப் பெரிய அறிவாளியாகக் கருதிய ஒருவன், ஞானி ஒருவரை சந்தித்தான். இந்த உலகத்தில் எந்தப் புத்தகத்திலும் காணப்படாத முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உபதேசத்தை அவனுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்திருந்தார் அந்த ஞானி. அதைப் பெறவே ஞானியைச் சந்தித்தான் அந்த ஆசாமி.
அவனிடம், ''மழையில் போய் நின்று கொண்டு தலையையும் கைகளையும் உயரத் தூக்கு. உனக்கு முதல் ஞானோதயம் அப்போது உண்டாகும்'' என்றார் ஞானி.

மறுநாள், ஞானியிடம் வந்தான் அந்த ஆசாமி. ''நீங்கள் சொன்னது போலவே செய்தேன். என் உடல் முழுவதும் நனைந்து போனது. என்னை, ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!'' என்றான். சற்றும் தாமதிக் காமல் ஞானி கூறினார்: ''நல்லது”. முதல் நாளிலேயே உனக்கு இவ்வளவு ஞானோதயம் ஏற்பட்டு விட்டதே!!!