மதுரையின் நாயகியாம் பவள நிற மேனி என் தாய் மீனாக்ஷி எனக்கு இந்த தொடரை நல்லபடியாக எழுத ஆசி வேண்டி என் அப்பன் அருள் மிகு கொச்சடயான் முத்தையனை துணையாக கொண்டு தொடங்குகின்றேன் !!!
அய்யா திரு.பரதன் மற்றும் அவர்கள் குழு இது வரை 130 கிராமங்களையும் அதன் உட்கிராமங்களையும் விரிவாக, ஆழமாக களப்பணி கண்ட விடா முயற்சியும் தன்னலம் கருதாத தொண்டும் என்னை மெய் சிலிர்க்க வைக்கின்றன...
ஏன் இந்த களப்பணி ? எதற்காக இப்பொழுது இதை செய்ய வேண்டும்? இதன் பயன் தான் என்ன? இப்படி உங்களுக்குள் எத்தனையோ கேள்வி கணைகளை தொடுக்க நீங்கள் ஆயத்தமாக இருக்கலாம் ...
இதற்க்கெல்லாம் ஒரே பதில் - எங்கோ ஒரு மூலையில் யாருக்கோ முகம் தெரியாத மனிதர்களுக்காக சிறு கூட்டுக்குள் அடைந்து வேலை வேலை என்று தாங்கள் சிங்கங்கள் தான் என்றறியா எனதருமை நண்பர்களுக்காக...
நாம் யார்... நமது பாட்டன் , பூட்டன் , முப்பாட்டன் எப்படியெல்லாம் உலகை வாழ வைத்தார்கள் என்று மறந்து போன எனது தலைமுறை மக்களுக்காக .. எனக்காக நானே எழுதிக்கொள்ளும் ஒரு சிறிய மடல் ... இனி வரும் நாட்களாவது நாம் விழித்தெழுந்து மீண்டும் ஒரு உலகம் செய்வோம் ... அந்த உலகத்திலாவது எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற சிந்தனையையும் செயலையும் பரப்புவோம்...
நாம் எதையும் புதிதாக செய்துவிடவில்லை ... நாம் யார் என்பதை நமக்கு உணர்த்தும் ஒரு சிறிய தொகுப்பகதான் இதை சமர்பிக்கிறேன் !!!
எழுத்து பிழையையும் , அர்த்த பிழையையும் தயவு செய்து சுட்டி காட்டி திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடுத்து ஒரு கூட்டு முயற்சியாக மாற்ற உதவுங்கள் நண்பர்களே ... மீட்டெடுப்போம் நாம் யார் என்பதை !!!