Monday, October 11, 2010

வெற்றியின் இரகசியம்

12 அக்டோபர் 2010

வெற்றியின் இரகசியம்

தாமஸ் ஆல்வா எடிசன் வேறு எந்த மனிதரைக் காட்டிலும் அதிகமான தோல்விகளைச் சந்தித்தார். அந்த அனுபவ அறிவைக் கொண்டு வேறு எந்த மனிதரைக் காட்டிலும் அவர் அதிகமாக வெற்றி பெற்றது இயற்கை. 1093 கண்டுபிடிப்புகள் அவர் பெயரில் உள்ளன. ஞபாகமிருக்கட்டும் எடிசன் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் முயற்சி செய்த காரணத்தினால்தான் 1093 புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. கோடிக்கணக்கான டாலர்களைச் சம்பாதிக்கவும், மனித சமுதாயத்துக்கு அளவிட முடியாத தொண்டு செய்யவும் முடிந்தது. இந்தக் கண்டுபிடிப்புகளெல்லாம் கடுமையான உழைப்பின் பலன்களே தவிர, எங்கிருந்தோ வந்து குதித்த எண்ணங்களின் விளைவுகள் அல்ல! அவர் கூறியது போல, “ஒரு மேதையின் புத்திசாலித்தனம் - ஒரு சதவிகிதம் திடீரென்று உதிக்கும் யோசனைகளிலும், 99 சதவிகிதம் வியர்வையிலும் அடங்கியிருக்கிறது”. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைப்பதன் மூலம் அதை அவர் நிரூபித்துக் காட்டினார்.

மின்சாரத்தைக் தேக்கி வைக்கும் ஸ்டோரேஜ் பாட்டரியைக் கண்டுபிடிக்கப் பத்துவருடம் உழைத்தார்! அவரும் அவரது உதவியாளர்களும் 17,000 வகைத் தாவரங்களைப் பரிசோதித்துப் பாகுபாடு செய்து பின்னர் ஒரே ஒரு மரத்திலிருந்து லேடக்ஸ் என்னும் பொருளை வடிக்கும் முறையைக் கண்டுபிடித்து வெற்றி அடைந்தார்கள்! ஒரு முறை வெற்றியடையும் பொருட்டு 17,000 முறை தோல்வியடைய தயாராக இருந்தார்.

தோல்வி என்பது வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களில் ஒன்றே தவிர அதில் அவமானம் ஏதும் இல்லை. தோல்வி கற்றுத்தரும் பாடத்தை நீங்கள் ஆவலுடன் கற்க வேண்டும். தோல்வியைக் காட்டிலும் சிறந்த ஆசான் இருக்க முடியாது என்பதை உணருங்கள். நீங்கள் தோல்வி அடையும் போது அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு மீண்டும் முயற்சி செய்வீர்களேயானால் தோல்வியை நீங்கள் தோற்கடித்து விடுவீர்கள். வாழ்க்கையின் மிகமுக்கியமான வெற்றிப்பாடம் அதுதான். அதைப் படியுங்கள். படித்தாற்கேற்ப வாழ்ந்து காட்டுங்கள். வெற்றி கிடைப்பது உறுதி.

முக்கிய குறிப்பு: 1093 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான தாமஸ் எடிசன் (டாமி) பள்ளிக்கூடத்தில் படித்தது ஆறே மாதம்தான்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Saturday, October 9, 2010

நல்ல பழக்கம்

11 அக்டோபர் 2010

நல்ல பழக்கம்

ஒரு சமயம் நபிகள் நாயகம் மேடையில் பேசிக் கொண்டு இருந்தார். அப்பொழுது அந்தக் கூட்டத்தில் இருந்த குடிகாரன் ஒருவன் எழுந்து நபிகள் நாயகத்திடம் எனக்கு இஸ்லாம் மதத்திலே இடம் உண்டா? என்று கேட்டான். உடனே பக்கத்தில் இருந்த ஒருவன், “குடிகாரனுக்கு இஸ்லாம் மதத்திலே இடம் கிடையாது என்றார். உடனே நபிகள் நாயகம் அப்படிக் கூறியவரைப் பார்த்து கையமற்த்திவிட்டு, உமக்கு இஸ்லாம் மதத்தில் இடம் உண்டு” என்றார். அப்படி என்றால், நான் அதிலே சேர்ந்துக் கொள்ளலாமா என்றான். “இறைவனை தொழுகும் பொழுது மட்டும் குடிக்கக் கூடாது” என்றார். “சரி என்று ஒத்துக் கொண்டான் அந்தக் குடிகாரன். கலிமா சொல்லப்பட்டது. முறைப்படி அவன் இஸ்லாம் மதத்திலே சேர்ந்தான். தொழுகைக்குப் போகும்போது மட்டும் குடிக்க முடியாத நிலைமை அவனுக்கு.

சிறிது நாட்கள் ஆகியது. நபிகள் அவனைப் பார்த்து, “காலையில் மட்டும் தொழுதால் போதாது! மாலையிலும் தொழ வேண்டும்” என்றார். அவன் இரண்டு வேலையும் தொழ ஆரம்பித்தான். இரண்டு நேரமும் குடிக்காமல் இருந்தான். அப்புறம், சிறது நாட்கள் கழித்து பகலிலும் ஒரு முறை தொழ வேண்டும் பிறகு அந்திப் பொழுதிலும் ஒரு முறை தொழ வேண்டும் என்றார் நபிகள். அவன் படிப்படியாக அந்தப் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டான்.

ஐந்து வேலையும் தொழ ஆரம்பித்துவிட்டான். ஐந்து வேலையும் அவனால் குடிக்க முடியாமல் போயிற்று! அப்புறம் தொழுகைக்குப் போய்க் கொண்டு இருந்தபொழுது. நபிகள் அவரைப் பார்த்து, “இறைவனைத் தொழப் போகும் பொழுது மட்டும் குடிக்காமல் இருந்து பயனில்லை, தொழுதுவிட்டு வந்தப்பிறகும் குடிக்காமல் இருக்க வேண்டும்” என்றார். அவன் அதற்கும் “சரி” என்று ஒத்துக் கொண்டான். இறுதியில் அந்த குடிகாரருக்கு குடிப்பதற்கே நேரமில்லாமல் ஆகிவிட்டது.

எல்லாமதமும் இறைவனோடு அடிக்கடி தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வது எதற்காக? நல்ல பழக்க வழக்கங்கள் வர வேண்டும் என்பதற்காகத்தான்.

இறைவனை உள்ளத்திலே உளமாற பாடுவோம். தீய பழக்க வழக்கங்களை அறவே மறப்போம்!

நல்ல பழக்க வழக்கங்களை பெறுவோம். நலம் பெறுவோம்!!

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Thursday, October 7, 2010

சிந்தனைகள்

08 அக்டோபர் 2010

சிந்தனைகள்

· ஒரு மனிதனுடைய மகிழ்ச்சியும், துயரமும் அவன் எந்த அளவுக்குக் கோபத்தைக் கட்டுப்படுத்துகிறவனாக இருக்கிறான் என்பதைப் பொறுத்தே அமைகிறது.

· ஒருவனுடைய சூழ்நிலை எவ்வளவு அதிர்ஷ்டவசமானதாக இருப்பினும் கோபத்தை அவன் அடக்காவிட்டால் முழுமையான துயரத்திற்கு ஆளானவனாகவே அவன் இருப்பான்.

· ஒருவனுடைய அறிவின் முதிர்ச்சியை எந்த அளவுக்கு கோபம் தணிந்தவனாக இருக்கிறான் என்பதை வைத்துக் கணிக்கலாம்.

· கோபம் கொள்ளுதல் குழந்தைப் பருவத்தில் ஏற்படுகின்ற பிரதிக்கிரியைய் என்றும் அது வாலிபப் பருவத்திலும் அதற்குப் பின்னும் தொடர்கிறது.

· தொல்லைகள் நிரம்பிய இந்த உலகத்தில் அமைதியும் சமாதானமும் காண துணிச்சலும் நம்பிக்கையும்தான் தேவை.

· ஒரு விஷயம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் நீங்கள் செய்கின்ற முயற்சியின் உத்வேகமும் இருக்கும்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Wednesday, October 6, 2010

சிந்தனைகள்

07 அக்டோபர் 2010

சிந்தனைகள்

  • ‘நாம் இப்போது எப்படி இருக்கிறோம் என்பது, இதற்கு முன் நாம் என்ன சிந்தித்தோம் என்பதைப் பொறுத்தது’ என்கிறார் புத்தர்.
  • நாம் எதைச் சிந்திக்கிறோம் என்பதோடு, நாம் எதை ஆழமாக நம்பிச் சிந்திக்கிறோமோ அது நம்முடைய வளர்ச்சியில் அதிகமாகப் பிரதிபலிக்கிறது.
  • மனம் எதை ஆழமாக நம்புகிறதோ அதைத்தான் மனிதன் சாதிக்கிறான்.
  • தொழிலில் வெற்றியும், தோல்வியும் மனதின் திறமையால் நிர்ணயிக்கப்படுவதில்லை. மனப்பான்மையினால் தான் நிர்ணயிக்கப்படுகிறது.
  • வெற்றியைச் சிந்தியுங்கள். வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள். வெற்றியை உருவாக்குவதற்குத் தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Tuesday, October 5, 2010

அன்பளிப்பு

06 அக்டோபர் 2010

அன்பளிப்பு

ஒரு முறை பெர்னாட்ஷா பழைய புத்தகக் கடைக்குச் சென்று அங்குள்ள புத்தகங்களை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் எழுதிய நாடகநூல் ஒன்று அங்கே இருந்தது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தார். அது ஒரு நண்பருக்கு பெர்னாட்ஷா ஏற்கனவே அன்பளிப்பாகக் கொடுத்த புத்தகம். அவருடைய நண்பர் அந்த புத்தகத்தை பழைய புத்தகக் கடையில் போட்டுவிட்டார் போலும். பெர்னாட்ஷா மறுபடியும் அந்தப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கினார். அந்த புத்தகத்திலே ஏற்கனவே ‘அன்பளிப்பு’ என்று எழுதியிருந்தது. அதற்கு கீழே ‘புதுப்பித்த அன்பளிப்பு’ என்று எழுதி கையெழுத்திட்டார். மறுபடியும் அதே நண்பருக்கு திருப்பி அனுப்பி வைத்தார். அதாவது அன்பளிப்பை புதுப்பித்தார்.

நாமும் சில நேரங்களில் அன்பளிப்பாக பெற்ற பொருட்களை அதுவும் முக்கியமாக புத்தகங்களை “செல்லாக்காசு போல” தூக்கியெறிவது உண்டு. நண்பர்களே புத்தகங்கள் வாழ்வின் தோழர்கள். அதுவும், படித்து அடிக்கோடிட்ட புத்தகங்கள் பல வருடங்களுக்கு பிறகு எப்போதாவது எடுத்துப் பார்த்தாலும் அந்த புத்தக வரிகள் நம்மை அந்தப் புத்தகத்தைப் படித்த நாள், இடம், பொருள், வயது என்று நம்மையே புதுப்பித்துவிடும். அந்த அடிக்கோடிட்ட வரிகள் நமக்கு நம்முள்ளே புத்துணர்ச்சியூட்டும்.

உதாரணமாக, “எண்ணங்களை மேம்படுத்துங்கள்” என்ற நூலை எழுதிய காப் மேயர் “வெற்றியாளனாக ஆவது எப்படி?” என்பதற்காக மட்டுமே மூன்று அறைகள் முழுவதுமாக நூல்களை வைத்துள்ளாராம்.

“நூல்களை சேமிப்போம்! அறிவை சேமிப்போம்!!”

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Monday, October 4, 2010

பகுத்தறிவு

04 அக்டோபர் 2010

பகுத்தறிவு

ஒரு மகாராஜாவின் மகன் மிகவும் மக்காக இருந்தான். அதிகாரம் உள்ள பல குடும்பங்களில் இந்த “மக்கு மகன்” பிரச்சனை எப்போதும் உண்டு. அவனுக்கு ஆட்சியை கொடுக்க மக்கள் விரும்பவில்லை. மூத்தவர் சபை எதிர்த்தது. “என்ன செய்யலாம்” என்று அரசர் கவலைப்பட்டார். வெளிநாட்டில் திறமையான கலாசாலையில் மகனைச் சேர்த்துவிட்டால் அவர்கள் எப்படியும் அறிவாளி ஆக்கிவிடுவார்கள் என்று மகாராஜா முடிவு செய்தார். அங்கு பலதுறைகள் இருந்தன. உயர்தரமான அந்தக் கலாசாலையில் ஐந்து ஆண்டுகள் தங்கிப் படித்துவிட்டு இளவரசன் திரும்பி வந்தான்.

அவனது உடை, நடை, பாவனைகள் என எல்லாம் மாறியிருந்தன. பளிச்சென்று உடையணியப் பழகியிருந்தான். அழகாக நடப்பது, கைகுலுக்குவது, மரியாதையாய்ப் பேசுவது என்று நிறைய மாற்றங்கள். மகாராஜாவுக்கு ஆனந்தம் தாங்கவில்வைல. முதியோர் சபையில் மகனை நிறுத்தி அவர்கள் அனுமதியுடன் அறியாவளியாக்கப்பட்ட மகனை அரசனாக்க நினைத்தார். பலரும் அவனை அறிவாளி என்றே ஒப்புக் கொண்டனர். பல்கலைக் கழகத்தின் சாதனையைய் பாராட்டினர்.

ஒரு வயதானவர் மட்டும் இளவரசனைச் சோதிக்க நினைத்தார். “என்ன படித்தாய்?” என்றார். “நிறைய, நிறைய… சோதிடம் கூட முறையாக கற்றுத் தந்தார்கள். நீங்கள் சோதிடத்தில் கேள்வி கேட்டால் கூடச் சொல்வேன்” என்றான். வயதானவர் தமது மோதிரத்தை உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டு, “இது என்ன?” என்றார். இளவரசன் யோசித்தான். ஒரு காகிதத்தை எடுத்து கணக்குப் போட்டான். “உங்கள் கையில் உள்ளது வட்டமானது. நடுவில் ஓட்டையானது. ஒளியுடையது” என்று விடை சொன்னான். வயதானவருக்கு உள்ளூர சந்தோஷம். இருந்தாலும், “அடையாளங்களைச் சொல்கிறாயே ஒழிய அது இன்னதென்று சொல்லக்கூடாதா?” என்றார். “அது எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை” என்றார் இளவரசன். “யூகித்துச் சொல்” என்றார் வயதானவர். உடனே இளவரசன் “பாடத் திட்டத்தில் இல்லையென்றாலும் என் பொது அறிவை வைத்துச் சொல்லி விடுவேன்.. அது ஒரு வண்டிச் சக்கரம்” என்றான்.

முட்டாள். சர்வகலாசாலை சொல்லிக் கொடுத்ததைச் சரியாகச் சொல்லிவிட்டான். ஆனால் வண்டிச்சக்கரத்தை எவரும் உள்ளங்கையில் ஒளித்து வைக்க முடியாது என்ற சின்ன விஷயம்கூட அந்த மடையனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

முட்டாளையும் படிப்பாளியாக்க முடியும். ஆனால் அறிவாளியாக்க முடியாது.

You can educate fools; but you cannot make them wishes.

நம்மூர் பழமொழி – ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

திருக்குறள் கூறுவது:

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்

குறள்விளக்கம்: அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்க கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராகக் கருதப்படுவார்கள்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவ மென்ப திழுக்கு

குறள்விளக்கம்: நன்றாக சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET.

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Sunday, October 3, 2010

பயம்

04 அக்டோபர் 2010

பயம்

நெப்போலியன் தனது சிறுவயதில் ராணுவ விடுதியில் தங்கி படித்துக் கொண்டு இருந்தான். அப்போது அறையில் அவர் கூடத் தங்கியிருந்த மற்றொரு மாணவன் தன்னுடைய அழகான பைய் ஒன்று காணாமல் போய்விட்டதாக மேலதிகாரியிடம் புகார் கூறினான். “யார் மேலாவது உனக்கு சந்தேகம் உண்டா?” என்றார் மேலதிகாரி. “நெப்போலியன் மேல்தான் எனக்கு சந்தேகம்” என்றான் அந்த சக மாணவன். உடனே அந்த அதிகாரி நெப்போலியனை தன்னோடு அறைக்கு அழைத்தார். நெப்போலியன் மெதுவாக மேலதிகாரியின் அறைக்குள் நுழைந்தான்.

மேலதிகாரி நெப்போலியனை விசாரிக்காமலேயே தனது கையில் பிரம்பை எடுத்தார். சரம் வாரியாக அடித்துத் தள்ளினார். நெப்போலியனை “ஏன் திருடினாய்? இனி இது மாதிரி தவறு செய்வாயா?” என்று கேட்டு நல்ல உதை! அவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தான் நெப்போலியன். அதற்கு பிறகு கொடுத்த தண்டனையையும் வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தான். சிறிது நாட்கள் கழித்து புகார் கொடுத்த அந்த மாணவன் மேலதிகாரியிடம் ஓடிவந்தான். “ஐயா… என்னோட அந்த பையை திருடியது நெப்போலியன் அல்ல! வேறொரு மாணவன். இப்பொழுதுதான் உண்மை தெரிந்தது. தெரியாமல் நெப்போலியன் மேல் புகார் கொடுத்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்!” என்றான். அநத அதிகாரிக்கு மிகவும் ஆச்சரியம். உடனே நெப்போலியனை அழைத்தார்.

“உனக்கு என்ன பைத்தியமா? நீ என்ன முட்டாளா? அன்று அந்த அடி அடித்தேன் அப்பொழுதே உண்மையைச் சொல்ல வேண்டியதுதானே என்றார்”. நெப்போலியன் அமைதியாகச் சொன்னான், “ஐயா! நீங்கள் என்னை அடிப்பதற்கு முன்பாக கேட்டு இருந்தால் நான் சொல்லியிருப்பேன். அடித்துக்கொண்டே கேட்டீர்கள். அப்பொழுது நான் இல்லை என்று சொன்னாலும் அடிக்கு பயந்து நான் அப்படி சொல்வதாக நீங்கள் நினைப்பீர்கள். நான் பயந்ததாக யாரும் நினைக்க கூடாது! அதை விட அடிவாங்குவது எனக்கு ஆட்சேபனை இல்லை!”.

சிறுவயதில் இருந்த நெப்போலியனின் அந்த பயமற்ற தைரியம்தான் பின்னாளில் மாபெரும் வெற்றி வீரனாக திகழ்ந்தது.

“தான் பயந்ததாகக்கூட யாரும் நினைக்கப்படக்கூடாது என்று நினைத்தால்… அது எப்பேர்பட்ட மனோதிடம்”.